இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தனது சொப்பனத்தை விளக்க விரும்பியபோது தானியேல் மாறாத சத்தியத்தை பேசினார். எங்களுக்கான கேள்வி நேரடியானது: "தானியேல் சொன்னதை நாம் யாவரும் நம்புகிறோமா?" நிச்சயமற்ற காலங்களில் நமது நம்பிக்கையின் அடித்தளம் என்ன? எல்லா பிரச்சனைகளும் , குழப்பமும், நிச்சயமற்ற தன்மையும் மெய்யாக எங்கு செல்கிறது என்று யாருக்குத் தெரியும்? நமது மிகவும் குழப்பமான பிரச்சனைகளுக்கு யாரிடம் தீர்வு காணலாம்? அரசியல் புரட்சி மற்றும் மோதல் காலங்களில் நம் இருதயம் எங்கே ஆறுதலை பெற்றுக்கொள்ள முடியும்? தானியேலுக்கும், அவரது நண்பர்களுக்கும் , ஒரு உறுதியான மற்றும் துல்லியமான பதில் இருந்தது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்ற நாமம் . அது அன்றைய சாஸ்திரிகளிடமோ அல்லது ஞானிகளிடமோ இல்லை. அது கிழக்கின் மதங்களில் இல்லை. அது பெரிய விக்கிரங்களை வணங்கும் மக்களிடம் அல்லது ஆவிகளிடத்தில் பேசும் நபர்களிடம் அது இல்லை. அது கர்த்தராகிய ஆண்டவரில் மட்டுமே இருந்தது மற்றும் இன்னும் எப்பொழுதும் உள்ளது.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , நீர் ஒரே மெய்யான மற்றும் ஜீவனுள்ள தேவன் ! மகிமையிலும், நீதியிலும், வல்லமையிலும் உமக்கு நிகரான வேறு எவரும் இல்லை, வேறு எதுவும் இல்லை. துதி, கனம் , மகிமை அனைத்தும் உமக்கே உரியது. பரலோகத்தின் பிதாவே, நீர் அடியேனுடைய வாழ்க்கையை நடத்துவீர் என்று முழு நிச்சயமாய் நம்புகிறேன், உம் விருப்பத்தை நான் எப்பொழுதும் செய்ய வேண்டும் என்ற புரிதலுக்கு என்னை வழிநடத்துங்கள். அன்புள்ள பிதாவே , நீர் எங்கள் உலகில் தலையிட்டு, தேசங்களின் கலாச்சாரங்களையும் அவற்றின் தலைவர்களையும் உம்மிடம் திரும்ப அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்! கர்த்தராகிய இயேசு. கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து