இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கொரிந்து பட்டணத்து மக்கள் தங்கள் ஞானம், வரங்கள் மற்றும் சகிப்புத்தன்மையில் மேன்மை பாராட்டினர். ஆயினும், இந்த ஞானம், வரங்கள் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவை உலகத்துக்கு உரியவைகள், மேலும் அவைகள் பரிசுத்தமானவைகள் அல்ல. ஒரு திருச்சபை எவ்வளவு வரங்கள் பெற்ற மக்கள் இருந்தாலும், அதின் தலைவர்கள் எவ்வளவு பூமிக்குரிய ஞானத்தினால் நிரம்பியிருந்தாலும், அல்லது பிற கருத்துக்களுக்கு அவர்கள் எவ்வளவு சகிப்புத்தன்மையுடன் இருந்தாலும், அந்த திருச்பையில் உள்ளவர்கள் சிறிய வாக்குவாதங்களிலும், பிடிவாதங்களிலும், மோசமான சண்டைகளிலும் சிக்கிக்கொண்டால், அவர்கள் முதிர்ச்சியற்றவர்கள் மற்றும் உலகத்துக்கு உரியவர்களாய் இருப்பார்கள். அந்த கூடுமிடம் கிறிஸ்துவானவரை அறிவிப்பதும் மற்றும் அவரை காண்பிக்கும் இடமாய் மாத்திரம் இல்லாமல், வெறுமனே ஒரு கூடும் இடமாகவும், அவர்களின் கூட்டங்கள் "வெறும் மனிதர்கள் " நிறைந்த இடமாய் மாத்திரம் இருக்கிறது அதை தாண்டி அங்கே வேறு ஒன்றும் இல்லை . நாம் இன்னும் அதிகமாக கிறிஸ்துவுக்குள் வாழ மீண்டும் ஜெநிபிக்கப்பட்டிருக்கிறோம் ! ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். எபேசியர் - Ephesians :2-10 உலகப்பிரகாரமானவர்களாகவும், "வெறும் மனிதர்களாகவும்" இருக்காமல், தேவன் நம்மைப் படைத்ததற்கு ஏற்ப வாழ்வோம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, நான் பொறாமையுள்ளவனாகவோ, சண்டையிடுகிறவனாகவோ, வம்புவார்த்தை பேசுகிறவனாகவோ அல்லது சிறியவனாகவோ இருக்கும்போது, ​​தயவுசெய்து என்னை இரக்கத்துடனே தாழ்த்தி, மனந்திரும்பும்படியாய் என்னை அழைத்து நடத்தியருளும் . நீர் என்னை உம் அன்பான பிள்ளையாக பார்க்கிறீர்கள் என்று எனக்குத் நன்றாய் தெரியும், எனவே நீர் அடியேனுக்குள் வாசம் செய்யும்படியாய் கொடுத்திருக்கிற பரிசுத்த ஆவியியானவரின் உதவியைக் கேட்கிறேன். இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து