இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனின் அற்புதத்தை நாம் எவ்வளவு முயற்சித்து புரிந்துகொள்ள ஞானத்தை பிரயோகித்தாலும் , அவர் எப்பொழுதும் தேவனாயிருக்கிறார் , நாம் அப்படியல்ல . அவர் மாத்திரமே தேவன் அவரே எல்லாவற்றிக்கும் காரணமானவர் என்று நாம் எப்பொழுதும் நினைவிற் கொள்ள வேண்டும் , பாவமானது ஞானம் மற்றும் அறிவை கொண்டு அவரைப்போல ஆகும்படியாய் முயற்சிக்கிறது. நாம் தேவனை அறிந்து கொள்ள வேண்டும், ஆனால் அவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளமுடியாது. நாம் அவருடைய குணாதிசயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் அவருடைய மகத்துவத்தையோ, நீதியையோ, பரிசுத்தத்தையோ நம்மால் அணுக முடியாது. இது உற்சாகமாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறது. ஆனால், ஒரு நாள் நாம் அவரைப் போலவே இருப்போம், அவரைப் போலவே ஆவியினால் அவரைப் பார்ப்போம் (1 யோவான் 3:1-3) மற்றும் நாம் முழுமையாக அறியப்பட்டதைப் போலவே முழுமையாக அவரை அறிந்துக்கொள்ளுவோம் (1 கொரிந்தியர் 13:11-12).

என்னுடைய ஜெபம்

மென்மையான நல் மேய்ப்பரே , உம்முடைய பரிசுத்தமான மற்றும் உன்னதமான தன்மையை என்னால் முழுமையாக புரிந்து கொள்ளவும் பாராட்டவும் முடியாத போது என்னுடன் பொறுமையாக இருந்ததற்காக நன்றி. இயேசுவை அனுப்பியதற்காக நன்றி, அதனால் அடியேன் உம்மை நன்றாக அறிந்துகொள்ள முடியும், மேலும் என்னை நான் அறிந்ததை விட நீர் என்னை நன்கு அறிவீர்கள் என்று நம்புகிறேன். இயேசு என்னை பரலோக வீட்டிற்கு அழைத்து வரும்போது உம்மை நேருக்கு நேரில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன் . அந்த நாள் மட்டிலும் , நான் உம்மை அன்புக்கூறுகிறேன் என்பதை நீர் அறிந்துக்கொள்ளும் . இயேசுவின் நாமத்தில் என் நன்றிகளையும் துதிகளையும் உம்மண்டை சமர்ப்பிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து