இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"இயேசுவே ஆண்டவர் !" இதின் அர்த்தம், எல்லா சிருஷ்டிப்புகளும் அதில் உள்ள யாவும் , அதிகாரத்திலும் வல்லமையிலும் இயேசுவுக்குக் கீழே உள்ளன என்று பொருளாகும் . ஒவ்வொரு தேவத்தூதர்களும் , பிசாசுகளும் , அசுத்த ஆவியும் இயேசுவுக்குக் கீழ்ப்படிகின்றன. அவர்களின் நோக்கமும், இவை அனைத்தும் உண்டாக்கப்பட்ட நோக்கமும், இயேசுவைக் கனப்படுத்துவதும் அவர் மூலமாய் சேவிப்பதும்தான். பிசாசுகளும் இப்போது இயேசுவை ஆண்டவராகக் என்னாமல் அவருக்கு உரிய கனத்தை செலுத்த வேண்டாம் என்று எண்ணினாலும் ,அவைகள் அவரை எதிர்த்துநிற்பதினால் அவைகளின் நோக்கத்தை மாற்றவோ அல்லது இயேசுவானவர் அவர்கள் மீது வெற்றிச்சிறந்தார் என்ற உண்மையை மாற்றவோ முடியாது . அவர் சிலுவையில் அறையப்பட்டதினாலும் இன்னுமாய் உயிர்த்தெழுதலின் மூலமாய் அவர்கள் மீது அவர் தனது மேன்மையைக் விளங்கச்செய்தார் (கொலோசெயர் 2:12-15). இவ்வுலகமும் அதில் உள்ள மகா விஸ்தாரமான எல்லா காரியங்களும் இயேசுவை கொண்டு உண்டாக்கப்பட்டதின் நோக்கமும் அவரே மேலானவர் என்பதை யாவரும் அறிந்துக்கொள்ளும்படியாய் அப்படி செய்தார்.(இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். { பிலிப்பியர் 2:10,11} "இயேசுவே ஆண்டவர்!" என்று கூறும்போது, நாம் அவருடைய சித்தத்திற்கு நம் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து, அவருடைய கிருபையின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்று அர்த்தமல்ல, ஆனால் அவர் மகிமையுடன் ஒரு நாளிலே திரும்பவருவதற்கு முன்பாக நாம் இந்த உண்மையை உணர்ந்து, கீழ்ப்படிதலின் மூலமாக நம் வாழ்க்கையை ஒப்புவிக்க வேண்டும் என்று அர்த்தம் (மத்தேயு 7:21-23). மனிதனுடைய மாம்ச சரீரத்திலே தேவனின் சாயலாக வந்தார் , இயேசு இம்மானுவேலராகவும் , நம்முடைய ராஜாதி ராஜாவும் , ஆண்டவராகவும், இரட்சகராகவும் நம்மிடையே தேவன் தம்முடைய குமாரன் மூலமாய் வெளிப்படுத்தி இருக்கிறார் (மத்தேயு 1:23; யோவான் 1:1-18; எபிரேயர் 1:1-3). நம் வாழ்வும் இருதயமும் அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கும்போது, ​​அவர் நமக்குக் வாக்களித்த இறுதி வெற்றியை இன்னுமாய் அந்த தேவனுடைய இறுதி வெற்றி உண்மையாக மாறுவதை யாராலும், எதனாலும் தடுக்க முடியாது!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் சர்வவல்லமையுள்ள தேவனே, இயேசுவின் மூலமாய் உம்மை வெளிப்படுத்தியதற்காக உமக்கு நன்றி. எல்லா வல்லமையையும், இவ்வுலகில் உண்டாக்கப்பட்ட ஒவ்வொரு காரியங்களும் மற்றும் எல்லா ஜீவராசிகள் மீதும் வெற்றி பெற்றதற்காக நன்றி. நான் உமக்கு சொந்தமான ஜனம் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்ததற்காக நன்றி; இந்த உலகத்தில் உள்ள எந்த அதிகாரமும், வல்லமையும் அல்லது நீர் உண்டாக்கின எந்த ஒரு சிருஷ்டிப்பின் வல்லமையும் உமக்கு சொந்தமானதை அடைய முடியாது. எல்லாவற்றையும் அவர் மூலமாய் உண்டாக்கினவரும், ராஜாதி ராஜாவுமாகிய , இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து