இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நம் வாழ்வில் இருக்கிறார். அவர் இப்போது, சாத்தானின் அழிவுகரமான தந்திரங்களில் இருந்து நம்மை மீட்டு , அவர் விரும்பும் இடங்களுக்கு நம்மை வழி நடத்திச் செல்லும் கிரியையில் இருக்கிறார். தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். இது நாம் கையிட்டு செய்யும் காரியங்களிலும், இன்னுமாய் நாம் எங்கு சென்றாலும் மெய்யாய் இருக்கிறது. நாம் அவருடைய தீர்மானத்தின்படி தேடி , அவருடைய சித்தத்தை உணர்ந்து வாழ்வதுதான் முக்கியம். அதுவே நமது குறிக்கோளாக இருந்தால், நம் ஒவ்வொரு அடியிலும் நம் தேவன் நம்முடன் இருக்கிறார் என்பதை உறுதியாக விசுவாசிக்கலாம்.

என்னுடைய ஜெபம்

தேவனே நீர் என் வாழ்க்கையில் கிரியை செய்து வருவதற்காக உமக்கு நன்றி. எனது வரையறுக்கப்பட்ட சிறந்த முயற்சி, உட்பார்வை மற்றும் விருப்பத்திற்கு என்னைத் தனியாக விட்டுவிடாததற்காக உமக்கு நன்றி. எனக்காக ஒரு திட்டத்தை வைத்திருந்ததற்காகவும் , உம் சித்தத்தை நான் தேடினால் , அந்த திட்டத்தை நான் குழப்ப முடியாது என்ற உறுதியுடன் இருப்பதற்கும் நன்றி. என் தேவனாகவும் , என் பிதாவாகவும் , வாழ்க்கை முழுவதும் என் உடன் பங்காளியுமாய் இருப்பதற்காக நன்றி. இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து