இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவானர ஜீவிக்கும் முன்னோடி மற்றும் அவரே சபைக்கு தலைவரானவர் . இவரை தவிர இந்த இடத்தை யாராலும் சரியாக நிரப்ப முடியாது. இயேசுவைத் தவிர வேறு யாராலும் இந்த நிலையை அடையமுடியாது. இயேசுவே முதற்பேறுமானவர் . அவருடைய தெய்வீகத்தன்மையின் காரணமாக அந்த மேன்மையான இடம் அவருடையது என்றாலும், அவர் சிலுவையில் நமக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்ததினாலே இந்த மகா மேன்மையை பெற்றார். இந்த உலகமும் அதிலுள்ள யாவும் உண்டாவதற்கு முன்பே அவர் ஜீவனோடு இருந்தார். அவரை கொண்டு அவர் மூலமாய் யாவும் சிருஷ்டிக்கப்பட்டது . நமக்காக மரணத்தை ஜெயித்து கடந்து வந்தவர் அவரே. அவரே ஆதியாய் இருப்பதினால் அவரே எல்லாவற்றிலும் முதல்வராயிருப்பார் !

என்னுடைய ஜெபம்

கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய பரிசுத்த சரீரமாகிய திருச்சபையை கட்டுப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து எங்களை கொண்டு உம்மையும் பிதாவாகிய தேவனையும் மகிமைப்படுத்துங்கள், உம்முடைய சித்தத்தால் எங்களுடைய ஊழியர்களை, மூப்பர்களின் இருதயங்களில் நிரப்புங்கள் . எங்களின் ஒற்றுமையாலும், பக்தியாலும் இந்த உலகத்தில் உள்ள மக்கள் உமது மகா மேன்மையைக் காண விரும்புகிறோம். பரிசுத்தமுள்ள தேவனே , திருச்சபை மூலமாக இயேசுவை கொண்டு உம்மை மகிமைப்படுத்த விரும்புகிறேன் . பிதாவாகிய தேவனே , உமக்கும் , உம்முடைய குமாரனும், எங்களுடைய இரட்சகருமான இயேசுவுக்கும், இப்போதும், எப்பொழுதும் எல்லா கனமும் , வல்லமையும் மகிமையும், ஸ்தோத்திரமும், புகழ்ச்சியும் உண்டாவதாக. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து