இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் வாழ்வில், அந்த உணர்ச்சிகரமான போராட்டங்கள் மற்றும் பெரிய அலைகளின் கொந்தளிப்பு போன்ற பிரச்சனைகளின் மத்தியில், தேவன் நம்மை எப்பொழுதும் கைவிடமாட்டார் அல்லது நம்முடைய சோதனை நேரங்களில் அவைகளை எதிர்கொள்ள நம்மை தனியே விட்டுவிட மாட்டார் என்பதை நம்புவதே நமக்கு மிகப்பெரிய சவாலாய் இருக்கும் . தேவன் நம்முடைய பாதுகாவலர் மாத்திரமல்ல , அவர் நமக்கு தொடர்ந்து உதவி செய்பவரும் கூட. நம் உலகமும் இன்னுமாய் நம்மைச் சுற்றியிருக்கிற காரியங்கள் நொறுங்குவது போல தோன்றினாலும் அவர் எப்பொழுதும் நம்முடனே இருக்கிறார். அவர் நம்மை மரணத்திலிருந்து விடுவிப்பார் அல்லது மரணத்தின் மூலம் நமக்கு ஜீவனை அளித்து இயேசுவானவர் வாசம் செய்யும் இடத்தில் நம்மை கொண்டுபோய் சேர்ப்பவர் . அவர் தீமையிலிருந்து பாதுகாக்க நம்முடைய கோட்டையாக இருப்பார் அல்லது தீமையை வெல்ல நமக்கு பெலன் தருவார். "தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்." எனவே, பயத்தினால் நாம் கரைந்துபோகாமல், அவரை பற்றிக்கொண்டு, அவர் மீது மாத்திரமே நாம் நம்பிக்கை வைப்போமாக !

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , இன்று வாழ்க்கையின் போராட்டங்களில், பெரிய அலை போன்ற பிரச்சனைகளின் மத்தியில் இருப்பவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். நான் யாருக்காக கவலைப்படுகிறேன் என்பதை நீர் அறிவீர். நான் முற்றிலுமாய் தணிக்க முடியாத அளவுக்குப் பெரியதாகவும், என்னால் முழு ஆறுதலைத் தர முடியாத அளவுக்கு வேதனையாகவும் இருக்கும் அவர்களின் போராட்டங்களில் நான் மிகவும் அக்கறை காட்டுகிறேன் என்பது உமக்கு நன்றாய் தெரியும். அவர்களை ஆசீர்வதித்து, உடனிருந்து விரைவில் விடுவிக்கும்படி நான் இப்போது கேட்டுக்கொள்கிறேன். நீரே எங்கள் ஒரே மெய்யான நம்பிக்கை, இயேசுவானவர் மாத்திரமே எங்கள் உறுதியான மீட்பர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து