இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்தவர்கள் மாத்திரமே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். ஏனென்றால், மனிதர்களாகிய நம்மில் எவருக்கும் நமது மிகப்பெரிய எதிரியாகிய மரணத்தைத் தடுக்கும் சக்தி இல்லை. ஆனால் நாம் விடாமுயற்சியுடன் செயல்பட்டால், மிகச்சிறப்பான வெற்றி ( ஜீவகிரீடம் ) நமக்குக் கொடுக்கப்படும் : மரணத்தை தோற்கடித்தவரின் கரங்களில் நம்முடைய வாழ்க்கை இருப்பதினால் நம் ஜீவன் முடிவடையாது!

என்னுடைய ஜெபம்

பிதாவே, வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது என்கிற சூழல்களில் எனக்கு உறுதியளித்ததற்காகவும் , இன்னுமாய் எப்பொழுதும் எங்கள் வாழ்க்கையிலும், வெற்றியிலும் பங்குகொள்வதற்காகவும் உமக்கு நன்றி. உம்முடைய ஜீவன் என்னில் மறைந்து இருக்கிறது என்பதை அறிந்து, நம்பிக்கையுடன் வாழ இந்த நாளில் எனக்கு உதவிசெய்தருளும் . என் ஜெய இராஜாவாகிய இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து