இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மகத்துவத்திற்கான இந்த சிறந்த சூத்திரத்தை யோவான் ஸ்நானன் வெளிப்படுத்த பல வார்த்தைகளை உபயோகிக்கவில்லை . உங்கள் சூத்திரம் என்ன? மகத்துவத்திற்கு இதேபோன்ற அணுகுமுறை தேவை என்று பவுல் கலாத்திய சபையாரிடம் கூறினார்: கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன். (கலாத்தியர் 4:19). கொலோசெயர்களிடம், நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன் என்று கூறினார் (கொலோசெயர் 1:28-29). பவுல் கொரிந்தியர்களிடம் சொன்னார், அவர்கள் இயேசுவை ஆண்டவராகப் பின்பற்றி செல்கையில், ​ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். (2 கொரிந்தியர் 3:18). மிக முக்கியமாக, சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான். , போதகர் மற்றும் ஆண்டவராகிய அவரைப் போல் இருப்பான் (லூக்கா 6:40). எனவே, இது உங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத சூத்திரம் என்று நீங்கள் நினைக்கவில்லையா? நாம் சுயநலமாக வாழ்வதை குறைக்கும்போது இயேசுவானவர் நம்மில் பெருகுவார் !

என்னுடைய ஜெபம்

பரலோகத்திலுள்ள அன்பான பிதாவே , என் இருதயத்திலும், என் வாழ்க்கையிலும், இயேசுவானவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகவும், அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். ஏனென்றால் நான் என்னைப் பற்றி குறைவாகவே அறிவேன், மேலும் இயேசு என் மூலமாக அதிகமாக வாழ்வார், அவர் என் வாழ்க்கையில் இல்லாமல் நான் எப்போதும் இருப்பதை விட அதிகமாக சிறுகவே வேண்டும் ! இயேசுவின் நாமத்தினாலே , நான் இவைகளை கேட்டு ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து