இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

யோவான் எழுதிய சுவிஷேச புத்தகத்தில் உள்ள பெரிய வரலாற்று சம்பவங்களில் ஒன்று நிக்கொதேமு . நிக்கொதேமு என்பவர் ஒரு சிறந்த போதகர், அவர் ஒரு இராக்காலத்தில் இயேசுவிடம் வந்தார், மேலும் சத்தியத்தை நேசிப்பவர்கள் ஒளியினிடத்திற்கு வருவார்கள் என்று இயேசு அவரிடம் கூறினார். பின்னர், நிக்கொதேமு ஏளனம் செய்யப்பட்டாலும் இயேசுவுக்காகப் பேசினார். பின்னர், மிக மோசமான நேரத்தில், அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும், நிக்கொதேமு தன்னை இயேசுவின் சீஷராக வெளிப்படுத்தினார். நிக்கொதேமு, இயேசுவின் காயப்பட்ட மற்றும் மரித்த சரீரத்தை எடுத்து, கல்லறையில் வைக்க அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புக்கு உதவினார். நிக்கொதேமு இருளில் இருக்கவில்லை, இருளிலிருந்து வெளிச்சத்திற்கு இயேசுவிடம் வந்தார். நாமும் அவ்வண்ணமாக இருளில் இருக்க கூடாது. இயேசு உலகத்தின் ஒளியாய் இருக்கிறார் ; நம்முடைய ஒளி அவருக்குள் காணப்படாவிட்டால், நம்முடைய இருள் மிகவும் ஆழமானதல்லவா ?

என்னுடைய ஜெபம்

பிதாவே , நான் உம்முடன் ஒளியில் நடக்க விரும்புகிறேன். கல்வாரியின் இருள், சிலுவையின் பாடுகளாகிய இருள் மற்றும் மரணத்தின் இருள் ஆகிய இவை இயேசுவுக்குள்ளாய் உம்முடைய ஒளியை அணைக்கவில்லை. அது அவரது ஒளியை எனக்கு இன்னும் அதிக பிரகாசமாக எரியச் செய்தது. சிலுவையிலே , என் மீதான உம்முடைய மாபெரிதான அன்பை நான் காண்கிறேன். சிலுவையிலே , இயேசுவானவர் என் பாவங்களை எடுத்துவிட்டார் என்பதை நான் உணர்கிறேன். சிலுவையிலே , உங்கள் மீதும் என் மீதும் இயேசுவின் அன்பை நான் அங்கு காண்கிறேன், அந்த அன்பு பூரணமாய் இருந்தது . பிதாவே , நீர் தந்தருளின இரட்சிப்புக்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம்முடைய நம்பமுடியாத தியாகத்திற்கு நன்றி. மேலும் இயேசுவே, எங்களை இருளின் நடுவிலிருந்து உமது ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைத்து வந்ததற்காக உமக்கு நன்றி. இயேசுவே, எங்கள் பரிபூரண ஆட்டுக்குட்டியே, உம்முடைய நாமத்திலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து