இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அநேக குழந்தைகளின் முதல் வார்த்தை "அப் -பா அப் -பா அப் -பா " என்ற சொற்கள் அடங்கியதாகும். இயேசுவின் காலத்தில், அப்பா என்பது குழந்தைகளின் மாம்ச பிரகாரமாக உள்ள தகப்பன்களுக்காக பயன்படுத்தப்பட்ட மென்மையான பெயராக இருந்தது என்பதில் எந்த ஒரு ஆச்சரியமுமில்லை. தேவன் நம்மைக் இரட்சித்த போது, ​​அவருடைய ஆவியை நமக்குக் கொடுத்தார். பரிசுத்த ஆவியானவர் அநேக வழிகளிலே நம்மை ஆசீர்வதிக்கிறார். முக்கிய ஆசீர்வாதங்களில் ஒன்று நம்முடைய ஜெபத்தில் ஆவியானவர் இடைப்பட்டு கிரியை செய்கிறார் . நமக்குள் இருக்கும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத போது அவர் நமக்காக பரிந்து பேசுகிறவராய் இருக்கிறார் (ரோமர் 8:26-27). தேவனை நம்முடைய அப்பா பிதாவே என்று அழைப்பது போல, பரிச்சயம், சார்ந்திருப்பது மற்றும் கனத்துடன் தேவனை அணுகுவதற்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார் .

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , எங்களை நேசித்ததற்கும், எங்களை மீட்டதற்காகவும் , உம்முடைய குடும்பத்திற்கு எங்களை அழைத்ததற்காகவும் உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, எங்களுடைய வாயின் வார்த்தைகளினால் , ​​​​எண்ணங்கள், தேவைகள் மற்றும் உணர்ச்சிகளை பிதாவிடம் பகிர்ந்து கொள்ள முடியாத வேளையில் நீர் அந்த தருணத்தில் எங்களுக்கு உதவியதற்காக உமக்கு மிக்க நன்றி - வாயின் வார்த்தைகள் எங்களுக்குள் இருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த போதுமானதாக இல்லை. அன்புள்ள அப்பா பிதாவே , நாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்களோ அப்படியாக இருக்க எங்களுக்கு வல்லமையை அளித்ததற்காக உமக்கு கோடான கோடி நன்றி. இயேசுவே, பரிசுத்த ஆவியானவர் என்னில் கிரியை செய்து, தேவன் நேசிக்கும் அன்புக் பிள்ளையாக என்னை அங்கீகரிப்பதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே , அடியேன் உமக்கு நன்றிகளையும் துதிகளையும் செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து