இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இன்று நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள்? நீங்கள் நன்மையைத் தேடுகிறீர்களா? அல்லது தீமையைத் விரும்புகிறீர்களா ? நிச்சயமாக, அநேக வேளைகளில் நாம் செய்வதை எப்பொழுதும் தீமை என்று அழைப்பதில்லை, ஆனால் அந்த காரியம் தீமையை நடப்பிக்கிறது அல்லவா? வெறுப்பை வளர்த்துக்கொள்வது, சில வேளைகளில் புறங்கூறுதல் அல்லது இச்சையை புகுத்துவது ஆகிய இவை யாவும் தீமையல்லவா ? தேவன் நம்மோடு இருக்க விரும்புகிறார் . அவர் ஒருபோதும் நம்மை விட்டு விலகவுமாட்டேன் அல்லது கைவிடவுமாட்டேன் என்று உறுதியளித்துள்ளார். ஆனால் தேவன் எங்கு இருக்கிறாரோ , அவருடைய குணமும், நீதியும், நற்பண்புகளும் அங்கே இருக்க வேண்டும்! அப்படியானால் நாம் நன்மையை எப்பொழுதும் நாட வேண்டும்!

என்னுடைய ஜெபம்

அன்பும், நன்மையும் நிறைந்த பிதாவே , இயேசுவை அனுப்பியதன் மூலம் நன்மை இன்னதென்று எனக்குக் காண்பித்ததற்காக உமக்கு நன்றி. உமது பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பியதற்காக உமக்கு நன்றி, அதனால் உம்முடைய நல்ல ஆவியின் கனிகளை நான் கொடுக்க முடியும். உமது ஜனங்களாக இருக்கும்படியாக கிறிஸ்துவின் சரீரத்திற்குள் என்னை அவயங்களாக வைத்ததற்காகவும் உமக்கு நன்றி, அதனால்உம்முடைய அன்பின் பராமரிப்பு தேவைப்படுபவர்களுக்கு நற்காரியங்களை செய்ய எனக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், பிதாவே, மெய்யாகவே நீர் ஒருவரே உண்மையுள்ளவர் என்பதை நான் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்ந்து அறிக்கையிடுகிறேன் . என் வாழ்வில் நான் உம்மையும், உம்முடைய நற்பண்புகளையும் குணாதிசயத்தையும், உம்முடைய நன்மைகளையும் தேடும்போது தயவுகூர்ந்து அடியேனுக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து