இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"புதியது மற்றும் மேம்படுத்தப்பட்டது!" பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகிய பழைய தயாரிப்பை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான திட்டமிடப்பட்ட வியாபாரத்தின் கவர்ச்சியான வார்த்தையாகும் . சில மாற்றங்களைச் செய்து, அதின் மேல்புறத்தை புதுப்பித்து, பழைய தயாரிப்பை புதியதாகவும் மேம்படுத்தப்பட்டதாகவும் மீண்டும் அறிமுகம் செய்வதேயாகும் . இயேசுவை புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியமில்லை அல்லது ஆத்தும ரீதியில் புதிய மூலப்பொருளைச் சேர்க்க வேண்டிய அவசியமுமில்லை என்பதை கொலோசு பட்டனத்து மக்கள் அறிய வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் விரும்பினார். மாறாக, அவர்கள் முதன்முதலில் அவரை ஆண்டவராக ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவர்களாக ஆன போது செய்ததைப் போலவே, கர்த்தராகிய அவருக்குள் வேர்க்கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டியது அவசியம் . அதுவே நமது தேவையும் கூட! நம் ஜீவனானது கிறிஸ்து இயேசுவில் ஆண்டவராக வேரூன்றி வளர்க்கப்பட வேண்டும், அவருடைய குமாரன் மூலமாக தேவன் அருளிய எண்ணிமுடியாத கிருபையின் ஈவுக்காக நன்றியுணர்வுடன் நிறைந்திருக்க வேண்டும். இயேசுவானவர் எல்லாவற்றிற்கும் மேலானவர், விஷேசமானவர் என்பதை நாம் உணர வேண்டும்!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே,சர்வவல்லமையுள்ள தேவனே , இயேசு கிறிஸ்துவுக்குள் எனக்குக் கொடுக்கப்பட்ட உம்முடைய கிருபைக்காக நன்றி. கண்கவர் மற்றும் புதிய அல்லது அலைந்து திரிந்து பெற்ற வெற்றிகளால் நான் ஈர்க்கப்படும்போது என்னை மன்னியுங்கள், மேலும் புதிய மற்றும் புதுமையான ஒன்றை நான் விரும்புகிறேன். தயவு செய்து ஒவ்வொரு நாளும் இயேசுவோடு என் நடைகளை புதியதாக ஆக்குங்கள். என் வாழ்க்கை ஜீவியத்தில் அவருடைய மேலான அதிகாரத்தை போற்ற என்னை பெலப்படுத்துங்கள், ஏனென்றால் அவைகள் கடினமான சூழ்நிலைகளை எதிர்க் கொள்ளவும், உற்சாகமடையவும் , பெலன் கொள்ளவும் , நம்பிக்கையடையவும், வல்லமையுடனும் ஒவ்வொரு நாளும் உற்சாகமான புதிய வாய்ப்புகளை எதிர்கொள்ள எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து