இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

திரும்ப கொடுக்க வேண்டும் ! வரி வசுலிக்கும் தினம் . எனக்கு பிடித்த காரியம் இல்லை , உங்களுக்கு எப்படி? ஆனால் அரசாங்கம், ஒழுங்கு மற்றும் சட்டங்கள் இல்லாமல் நாம் எங்கே இருப்போம். இப்பொழுது அமளில் இருக்கும் நடைமுறை நமக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். ஒருவேளை நடைமுறையே இல்லையென்றால் எப்படி இருக்கும். ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்,எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்,நம் வாழ்வில் மீட்பவர்களாகவும், நமது குடியுரிமையில் கீழ்ப்படிந்தவர்களாகவும், இன்னுமாய் நம் நாட்டை ஆசீர்வதித்து, மறுமலர்ச்சியைக் கொண்டுவர தேவனிடம் வேண்டிக்கொள்ளுவோம் .

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே, அடியேன் எவருக்கும் சொந்தமாயிராமல், எந்த ஒரு அதிகாரத்துக்கும் கீழ்பட்டிராமல் உமக்குள்ளாய் சுதந்தரவாளியாய் இருப்பதற்காக நன்றி செலுத்துகிறேன். ஆனாலும் இந்த நாட்டினுடைய சட்டத்திற்கு உம் சித்ததின்படியாய் கீழ்படிந்து உம் நாமத்திற்கு மகிமை கொண்டுவருவேன். அதே நேரத்தில், ஆண்டவரே, எங்கள் தேசத்தை நீர் குணப்படுத்தி, எங்கள் இருதயங்களை உம்மிடம் கொண்டு வர வேண்டும் என்று நான் ஊக்கமாய் வேண்டிக்கொள்கிறேன். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து