இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கர்த்தர் நமக்கு சமீபமாயிருக்கிறபடியால், நாம் யாவரும் சந்தோஷமாயிருந்து மற்றவர்களை சாந்தத்துடனே நடத்தலாம். அவர் எப்பொழுதும் நம்முடனே இருக்கிறார், ஏனென்றால் அவர் தம் பரிசுத்த ஆவியின் மூலமாக நம்மில் வாசம் செய்கிறார் . அவருடைய வருகை சமீபமாக இருக்கிறபடியால் அவர் நம் அருகிலே இருக்கிறார் என்பதை நாம் அறிந்துக்கொள்ளலாம். நாம் மற்ற விசுவாசிகளுடன் கூடிவரும்போது, ​​உதவிகள் தேவைப்படும் மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும்போது அல்லது நண்பர்கள் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களைச் உடைய மக்களுக்கு நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளும்போது அவர் நமக்கு சமீபமாயிருக்கிறார். கர்த்தர் சமீபமாயிருக்கிறார், ஏனென்றால் அவர் நம்முடன் இருப்பார் என்றும், நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்றும் வாக்குக் கொடுத்திருக்கிறார். இயேசுவானவர் நம்மில் வாழ்வதாலும், நம் மூலமாக செயல்படுவதாலும், நமக்காக மறுபடியுமாய் வருப்போவதாலும் நாம் சந்தோஷமாகவும் சாந்தமாகவும் இருக்க முடியும்! கர்த்தர் சமீபமாயிருக்கிறார் என்பதை அறிந்த ஒரு சந்தோஷமான மற்றும் கனிவான நபரை விட வேறு உறுதியான காரியம் ஒன்றுமில்லை!

என்னுடைய ஜெபம்

பிதாவே , நான் தனிமையில் இருக்க மாட்டேன் என்பதை அறிந்து மெய்சிலிர்க்கிறேன். என் பாவங்களுக்காக இயேசுவை சிலுவையில் மரிக்க அனுப்பியதற்காக உமக்கு நன்றி. நான் மற்ற விசுவாசிகளைச் சந்திக்கும்போதும், அவருடைய நாமத்தினால் மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும்போதும், அவரை அறியாதவர்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளும்போதும் என்னுடனே வாசம் செய்யும்படியாய் இயேசுவானவரை அனுப்பியதற்காக உமக்கு ஸ்தோத்திரம் . நான் எப்படி வாழ்கிறேன், மற்றவர்களுக்கு எப்படி ஊழியம் செய்கிறேன் என்பதை அவருடைய மாறாத பிரசன்னத்தினால் நான் அனுபவிக்கும் நிலையான மகிழ்ச்சி சாட்சியாய் இருக்கட்டும். இயேசுவின் அருமையான நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து