இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கொடுமையான அரசாங்கங்கள், இன பாகுபாடு மற்றும் மனித அநீதி ஆகிய கடினமான காரியங்களில் தேவனுடைய இந்த வாக்குறுதி ஒரு மாயையாகத் தோன்றின காலங்கள் நம் உலக வரலாற்றில் உள்ளன. ஆனால் காலப்போக்கில், கொடுமையான அரசாங்கங்கள் தகர்த்து ஏறியப்பட்டன . பெரும்பாலும் அவமானத்தினாலும், நிந்தையினாலும் சர்வாதிகாரிகள் அவர்களுடைய கல்லறைகளுக்குச் செல்கிறார்கள் . தார்மீக கோபம் போதும் என்கிற மன நிறைவை மாற்றுகிறது. எனவே இயேசு நமக்குக் கற்பித்த ஜெபத்தை புதுப்பிப்போம்: "உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக!" நமது குடும்பத்திலே, நட்புகள் மத்தியிலே, சபை நடுவே , சமூகங்கள் மத்தியிலே மற்றும் நாம் வாழ்கிற கலாச்சாரங்களின் நடுவிலே பரலோகத்தின் தேவனின் சித்தம் செய்யப்படுவதை விளங்கச் செய்வோம் ! ராஜ்யத்தின் மக்களாக, இவ்வுலகில் வாழும் அவநம்பிக்கையான மக்களுக்கு, பரலோகத்தின் தேவனுடைய சித்தத்தின் நெறிமுறைகளையும், மேன்மைகளையும் மாதிரியாகக் காண்பிக்க நாம் யாவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனே , எங்களுடைய உலகத்தை கறைபடுத்தும், விலையேறப்பெற்ற மற்றும் அப்பாவி மக்களை நசுக்கும் மனிதாபிமானமற்ற தன்மையை, நீர் எங்களை காட்டிலும் அதிகம் வெறுக்கிறீர் என்பதை நான் அறிவேன். தயவு செய்து, பிதாவே , இரக்கமற்றவர்களுக்கும், அநீதி இழைப்பவர்களுக்கும் உமது சித்தத்தைக் காண்பித்து , அவர்களுடைய வாழ்க்கையிலே ஒழுக்கத்தைக் கொண்டு வாரும் . உம்முடைய மக்களாகிய நாங்கள், ஒப்புரவாக்குதல் , நீதி, குணப்படுத்துதல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் ஊழியர்களாக இருக்க வேண்டும் என்று எங்களை உறுதிப்படுத்துங்கள். அடியேனும் இன்னுமாய் கிறிஸ்துவுக்குள் வாழும் என் சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி, ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை தேவைப்படும் நம் உலகில் உள்ள ஜனங்களுக்கும் , வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நீதிக்காக நிற்க உதவும் ஒருவருக்கு உம்முடைய நீதியையும், நியாயத்தையும் காண்பிக்க எங்களை பயன்படுத்தும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து