இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் கடைசியாக எப்போது ஜெபித்தீர்கள் , அப்பொழுது தேவனிடம் எதையும் குறித்து கேட்காமல், வெறுமனே அவருக்கு நன்றி சொல்லி பாராட்டினீர்கள்? நன்றி மற்றும் ஸ்தோத்திரம் மட்டும் செய்யும் நாளாக இன்று ஏன் பயன்படுத்தக்கூடாது? எதையும் பதிலுக்கு கேட்காமல் ; தேவனை மாத்திரம் புகழ்ந்து, நன்றி செலுத்தி, ஸ்தோத்திரம் சொல்லுங்கள்! அவர் யார், அவர் என்ன செய்தார், என்ன செய்யப் போகிறார் என்பதற்காக அவரைப் புகழ்ந்து பேசுங்கள்! உங்களை ஆசீர்வதித்ததற்காகவும், உங்களைக் மீட்டதற்காகவும், அவருடைய மகிமைக்குள் கொண்டு வந்ததற்காகவும் அவருக்கு நன்றி செலுத்துங்கள் ! நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. என்று நன்றி மற்றும் ஸ்தோத்திரம் செய்யும் நாளாக அமையட்டும். ஆமென்.

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே , அடியேன் எண்ணிப் பார்க்கமுடியாத ஒவ்வொரு பாராட்டு வார்த்தைக்கும், என் நாக்கு உச்சரிக்கக்கூடிய ஒவ்வொரு நன்றியுள்ள வார்த்தைக்கும் நீர் மாத்திரமே தகுதியானவர் . நீர் மகிமையுள்ளவர் , வல்லமையுள்ளவர் , பரிசுத்தமானவர், மிகவும் பெலமுள்ளவர் , அற்புதமானவர். நீர் பொறுமையுள்ளவராகவும் , மன்னிப்பவராகவும், தியாகம் செய்பவராகவும், அன்புள்ளவராகவும் , கனிவு நிறைந்தவராகவும் இருக்கிறீர். அடியேன் கற்பனை செய்வதை விட மிகவும் பெரியவர் , ஆயினும் என் சுவாசத்தை விட நெருக்கமாகவும் என்னோடே இருக்கிறீர் . உமது மகத்துவம் என் சொற்களஞ்சியத்தில் உள்ள வார்த்தைகள் போதாது , உமது பெருந்தன்மை என் இருதயத்தை மூழ்கடிக்கிறது. என் ஒவ்வொரு எண்ணத்திலும், செயலிலும், வார்த்தையிலும் நீர் மாத்திரம் மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் அதற்கு நீர் உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் அடியேன் உம்மை போற்றுகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து