இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எங்கே உங்களுடைய இருதயம் வாழ்கிறது? இந்த வசனங்கள் இதை குறித்தே பேசுகிறது. நம் இருதயத்துடன் நாம் அதிக நேரம் செலவிடும் இடத்தைப் பற்றியது. தேவன் எவ்விடத்திலும் இருக்கிறார் என்ற சிந்தை அல்லது கவனம் எப்பொழுதும் உங்கள் வாழ்வில் தொடர்ந்து இருக்கிறதா? உங்களுடைய எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் அவர் கண்களால் காணமுடியாத ஆனால் எப்போழுதும் உங்களோடிருக்கிறவரா? அல்லது நமக்கு சாதகமான நேரங்களில் நம்மோடு இருக்கிறாரா மற்றும் நம்முடைய விருப்பான காலங்களில் அல்லது சுமூகமான வாழ்க்கை செல்கிறது என்று நாம் நினைக்கும் சூழ்நிலைகளில் அவர் இல்லை என்று கருத்தில் கொள்கிறோமா? நாம் எப்பொழுதும் தனித்து விடப்படுவதில்லை என்று அறிந்து கொள்வதே மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும். ஜெபம் என்பது எப்பொழுதும் ஆவியிலிருந்து -தேவஆவியானவருடனும்,பிள்ளை- பிதாவினிடமும், மனுஷன்- தேவனிடமும் தொடர்ந்து பேசுவதாகும். ஸ்தோத்திரமும்,சந்தோஷமும் ஆகியவை வெளிப்புற சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கான சிறந்த நினைவூட்டலாய் இருக்கிறது .

என்னுடைய ஜெபம்

விலையேறபெற்ற மற்றும் நீதியுள்ள பிதாவே , எப்போதும் உம்முடைய சமூகம் இருப்பதற்காக உமக்கு நன்றி. இன்று உம்முடைய பிரசன்னம் பற்றிய ஆழமான நன்றியறிதல் மற்றும் ஆழமான விழிப்புணர்வை எனக்குத் தாரும் . உம்முடைய கிருபையை கொண்டு நீர் என்னை இரட்சித்து, அருளின சந்தோஷத்தை என் வாழ்க்கையிலே அவைகள் பிரதிபலிக்கட்டும். உம்முடைய வீடாகிய திருச்சபையை என் இருதயம் எப்பொழுதும் வாஞ்சிக்கட்டும் . என் இரட்சகரும் சகோதரருமான இயேசுவின் நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து