இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அவருடைய கிருபையினால் மரணத்தினின்று மாத்திரம் மீட்கப்படாமல். தேவனுடைய மகிமைக்காகவும் மீட்கப்பட்டிருக்கிறோம் . அவர் நம்மை மறுபடியுமாய் ஜெநிப்பித்திருக்கிறார். நாம் அனைவரும் அவரின் கைவேலையாய் இருக்கிறோம், நம்முடைய வார்த்தையினாலும், செய்கையினாலும், தேவன் தம்முடைய நன்மையும், கிருபையும் விளங்கும்படி அவர் விருப்பமமுள்ளவராய் இருக்கிறார்.

என்னுடைய ஜெபம்

எல்லாவற்றையும் சிருஷ்டித்தவரும் அதை நிலைநிறுத்துகிறவராகிய எங்கள் பிதாவே,உம்முடைய சிருஷ்டிப்பை என்னிலே நிலைவரப்படுத்தும். அடியேனை ஒரு உபயோகமுள்ள கருவியாக உம்முடைய ஊழியத்திலே பயன்படுத்தும். நீர் என்னில் உருவாக்கின உம்முடைய தாலந்தையும், என் மாதிரியையும் கொண்டு என் குடும்பத்தையும் , என் சிநேகிதர்களையும் மற்றும் என்னில் சார்ந்த அனைவரையும் உம்முடைய பூரண கிருபையில் வளரும்படி ஆசீர்வதித்தருளும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து