இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வாழ்க்கையில் ஏமாற்றமும், அதிருப்தியும் எண்ணற்ற காரணங்களுக்காக ஏற்படலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் , தம் மீதே அதிக அக்கறை செலுத்துவது , வாழ்க்கையின் மீது வெறுப்படைவது போன்ற இவைகள் அறிகுறிகளாகும். நாம் பெற்ற எண்ணற்ற ஆசீர்வாதங்களை மறந்துவிட்டோம், பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்துவதைப் புறக்கணித்துவிட்டோம், நம் பிதாவை போற்றி துதிக்காமல் அமைதியாகிவிட்டோம், இன்னுமாய் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவுவதை விட்டுவிட்டோம். மற்றவர்களைப் குறித்து எப்பொழுதும் சிந்திக்கும் விதமாய் கிறிஸ்து வாழ்ந்தார். நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றும்போது, ​​நம்மை ஆசீர்வதிப்பவர்களின் வாழ்க்கையில் நமது செயல்கள் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன, மேலும் நாமும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணருகிறோம் . நம்மை குறித்தே சிந்திப்பதை அகற்றி , நம்முடைய அண்டை வீட்டாரை ஆசீர்வதிப்போம்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள மற்றும் ஒப்பற்ற தேவனே , என்னைச் சுற்றியுள்ள ஜனங்களின் வாழ்க்கையில் உள்ள துன்பங்களையும் , துயரங்களையும், இன்னல்களையும் காணும்படி எனக்கு உதவியருளும் . உம்முடைய மாபெரிதான அன்பையும், கிருபையையும் ருசிபார்க்க விரும்பும் மிகவும் அவசியமுள்ள ஜனங்களை ஆசீர்வதிக்க அடியேனை தயவுகூர்ந்து எடுத்து பயன்படுத்தியருளும் . இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து