இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நீதியுள்ளவர் ! அன்போடு கூடிய நியாயம் இவ்வுலகிலே மிகவும் அரிதாகவே நிலவுகிறது , பரலோகத்தின் நீதி நியாயம் மாத்திரமே இறுதியில் வெற்றி பெறும் என்பதற்கு தேவன் ஒருவரே நம் முழுமையான உறுதியாகும் . எல்லா தேசத்தாருக்கும், மக்களுக்குமான இந்த நம்பிக்கை, தேவனுடைய ஊழியக்காரராகிய இயேசுவானவரே. அவர் மறுபடியுமாய் திரும்பி வந்து, தேவனுடைய சத்தியத்தையும் அன்பின் நியாயத்தையும் தன்னுடனே கொண்டு வருவார். மாரநாதா என்பதற்கு (1 கொரிந்தியர் 16:22), கர்த்தராகிய இயேசுவே வாரும் !

என்னுடைய ஜெபம்

நீதியும் இரக்கமுமுள்ள பிதாவே , அடியேன் ஜீவிக்கிற இவ்வுலகில உள்ள அநியாயத்தினாலும், ஏழை எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாலும் நான் மனமடிவடைகிறேன் . தயவுக்கூர்ந்து சீக்கிரமாய் இயேசுவானவரை திருப்பி அனுப்புங்கள், அவருடனே உம் ராஜ்யத்தின் நீதியையும் நேர்மையுமான நியாயத்தையும் கொண்டு வாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து