இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் எதை அதிக விலையேறப் பெற்றதாக எண்ணுகிறீர்கள் , பணத்தையா? அல்லது ஞானத்தையா ? இந்த வசனத்தை கூர்ந்து கவனியுங்கள் . ஞானம் இல்லாத இடத்தில் பணமானது மெய்யாகவே பயனற்றதாகும் . மூடரின் கைகளில் உள்ள பணம் சரியான நோக்கத்துக்கு செலவிடப்படாமல் அது விரயமாய் கழிந்து விடும். செல்வம் அல்லது புகழ்ச்சியை நாடுவதை விட, சாலொமோனைப் போல, தேவனுக்கேற்ற ஞானத்தை நாடுவோமாக , மேலும் வாழ்க்கையில் மற்ற விஷயங்கள் - பணம் போன்ற காரியங்கள் - தங்களைக் தானே பார்த்துக்கொள்ளும்.

என்னுடைய ஜெபம்

நித்திய தேவனே மற்றும் ஞானமுள்ள பிதாவே , எனது நேரம், முயற்சி மற்றும் பணம் ஆகியவற்றுள் அடியேன் நாடவேண்டிய மிகவும் முக்கியமானது எது என்பதை அறிய எனக்கு உன்னத ஞானத்தைத் தாரும் . தயவு செய்து உமது பரிசுத்த ஞானத்தினால் என்னை ஆசீர்வதியுங்கள், இதன் மூலமாக நான் என் வாழ்க்கையை மெய்யாகவே அர்த்தமுள்ளவற்றில் முதலீடு செய்து உமது மகிமைக்காக மாத்திரமே வாழ முடியும். இயேசுவின் மேலான நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறேன், ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து