இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"எழுந்திருக்கபண்ணுவேன் !" என்ற இயேசுவின் வாக்குறுதியைக் கேட்பதிலிருந்து மரணம் கூட நம்மைத் தடுக்காது என்ற செய்தியை கேட்டு நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்களா? அவருடைய சத்தத்தை கேட்டு அவருடனே கூட நித்தியக்காலமாய் வாழ்வோம். லாசருவைப் போல நாமும் கல்லறையிலிருந்து வெளியே வந்து விடுதலையாவோம் (யோவான் 11:32-44). இயேசு மரித்த சிறுமியை கையைப் பிடித்து உயிர்த்தெழுப்பியது போல (மாற்கு 5:35-42), நாமும் உயிர்த்தெழுவோம். லாசரு மற்றும் அச்சிறுமியைப் போலல்லாமல், கர்த்தருடைய பிரசன்னத்திலும் மகிமையிலும் பங்குபெற ஜீவன் உள்ளவர்களாக வாழும்படி நாம் என்றென்றும் மரணத்திலிருந்து விடுபடுவோம்! நம்முடைய கர்த்தருடைய வருகைக்காக நான் காத்திருக்கையில், அத்தகைய நம்பிக்கை என் ஆவியை உற்சாகமடைய செய்கிறது ; உங்களுக்கு எப்படி?

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , இயேசுவின் உயிர்த்தெழுதல் மரணத்தை அழித்து உம் வல்லமையை வெளிப்படுத்தியதற்காக நன்றி. உம் குமாரன் மறுபடியுமாய் திரும்பி வருவதற்கு முன் நான் மரித்தால் என்னை மரித்தோரிலிருந்து எழுப்புவேன், உம்முடன் இருக்க என்னை நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்வேன் என்ற வாக்குறுதிகளில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. என் இரட்சகரின் நாமத்தினாலும் அதிகாரத்திலும், நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து