இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் தேவனை துதிக்கக்கூடிய விஷயங்கள் பல இருந்தாலும், அவர் திட்டமிட்டு வாக்குறுதியளித்ததைச் செய்ய சத்தியபரராய் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நம்மில் பலர் பெரிய கனவு காண்பவர்களாகவும், திட்டமிடுபவர்களாக இருந்தாலும், அவர் மட்டுமே செய்யக்கூடிய அற்புதமான திட்டங்களை தேவனால் மாத்திரமே நிறைவேற்ற முடியும்! நம்முடைய ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும், நித்திய எதிர்காலத்திற்காகவும், "[அவர்] தம்முடைய உண்மையின்படி வியக்கத்தக்க காரியங்களை , ஆதி காலங்களுக்கு முன்பே திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறார் " என்பதால், நாம் தேவனைத் துதிக்கிறோம்!

என்னுடைய ஜெபம்

அற்புதமான மற்றும் ஆச்சரியமான தேவனே , இந்த உலகத்தை அநேக காரியங்களை கொண்டு , அழகோடும், ஞானத்தோடும் திட்டமிட்டு சிருஷ்டித்ததற்காக உமக்கு நன்றி. எங்கள் வாழ்வில் உம் சிறந்த, ஆக்கப்பூர்வமான, மீட்பு மற்றும் அன்பான கிரியைகளுக்காக நன்றி. இந்த உலகம் உருவாகுவதற்கு முன்னமே எங்களுக்காக இரட்சிப்பின் திட்டத்தை வைத்திருந்ததற்காக உமக்கு நன்றி. உம்மை கனம் பண்ணுவிப்பதற்கும் , உமக்குப் பெருமை சேர்ப்பதற்கும் எங்கள் திட்டங்களில் நாங்கள் மிகவும் விடாமுயற்சியுடன் மற்றும் ஒழுக்கத்துடன் இருக்க முற்படுகையில், தயவுக்கூர்ந்து எங்களுக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தினாலே நாங்கள் உம்மைப் போற்றுகிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து