இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் சுயத்திற்காக மரிப்பதே கிறிஸ்தவமாகும். சிலர் இதை அருவருப்பு , கடினம் , கசப்பு என்று கருதுகிறார்கள். மற்றவர்களுக்காக நம்முடைய சுய ஆசை இச்சைகளை, விருப்பங்களை எதற்காக விட்டுவிட வேண்டுமென்று வியப்பாக கேட்கிறார்கள். இதை ஒரு அடிமைத்தனம் என்றும் கூட குற்றஞ்சாட்டுகிறார்கள் . ஒரு பறவை காற்றோட்டத்துக்கும், மீன் நீரோட்டத்துக்கும் தன்னை ஒப்புக்கொடுப்பது போல நாம் நம்முடைய வாழ்கையை கிறிஸ்துவுக்காக அர்பணிக்க வேண்டுமென்பதை உணரத் தவறுகிறோம். நாம் கர்த்தரிடத்தில் நம்மை ஒப்புக்கொடுத்தோமானால் நாம் எதற்காக உண்டாக்கப்பட்டோமோ அதற்காக நிற்கும்படி பெலன் கொடுப்பார் ,நித்யத்திற்காக நம்மை உபயோகிக்கும்படி ஆயத்தமாக்குவார். அநித்தியமான எல்லைக்குள்ளாய் நம் வாழ்க்கையை உட்படுத்தாமல் அதின் மேல் அதிகாரம் கொடுத்து நம்முடைய சிருஷ்டிகரை நம் தகப்பனாக ஒப்புரவாகும்படி ஆசீர்வதித்திருக்கிறார். கிறிஸ்துவுக்காக நம்மை ஒப்புக்கொடுத்ததினால் நாம் இழந்தது என்ன?.... சுயநலம்,சுயசேதம் ஆகிய இவைகள் நம்முடைய கலகத்தினாலுண்டானது.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே, இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்னுடைய வாழ்க்கையில் நீர் நடப்பித்த செயல்களுக்காக நன்றி. நீர் உம்முடைய குமாரனும் என்னுடைய இரட்சகருமானவரின் சாயலுக்கு ஒப்பாக மறுபடியுமாய் ஜெநிப்பித்தீர்.நான் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் என்னை பெரிய அளவில் உபயோகிப்பீர் என்று விசுவாசிக்கிறேன். என் இருதயத்தை முற்றிலுமாய் பரிசுத்தம்செய்யும். அடியேனுடைய வாழ்க்கையை வல்லமையுள்ளதாய் பயன்படுத்திக்கொள்ளும்.தயவுகூர்ந்து என் எண்ணங்களை விரிவாக்கி இன்னும் அதிகமாய் தரிசனம் காணும்படி உதவிசெய்யும். உம்முடைய குமாரனுடைய வாழ்க்கையின் அதிகாரத்தினால் எல்லா காரியங்களிலும், கையிட்டு செய்யும் வேலையிலும் , தரிசனம் காண்பதிலும் உம்முடைய மகிமைக்காக செய்ய ஆவலுள்ளவனாய் இருக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து