இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்களுடைய பெலன் என்ன ?, வாலிபமா?, நிலைமையா ?ஞானமா?, நண்பர்களா ?அல்லது அனுபவமா ?. நம்மில் ஒருவரும் சுயதிறமை, ஞானம், செல்வம், உடல் ஆரோக்கியம் போன்றவைகளை சார்ந்து வாழமுடியாது.ஏனென்றால் இவைகள் நம் பலவீனமான வாழ்கை, சூழ்நிலையினால் பாதிக்கக்கூடியது. தேவன் ஒருவரால் மாத்திரமே நாம் வாழ இயலாத சூழ்நிலையில் நம்மை வாழவைக்கவும், சாதாரண சூழ்நிலையிலும் செழித்தோங்கச்செய்யவும், நற்காலங்களில் விருத்தியடைய செய்யவும் முடியும் . தேவனை நோக்கி ஜெபித்து, அவருக்காக காத்திருந்து, அவரையே சார்ந்து வாழுவோம்!

என்னுடைய ஜெபம்

தேவனே, என்னுடைய கடினமான நாட்களில் அடியேனை காத்தமைக்காக ஸ்தோத்திரம். நினைக்கிறதற்கும் அதிகமாய் உமக்கென்று காரியங்களை செய்யும்படி உதவிசெய்து அடியேனை உயர்த்தினீர் அதற்காக ஸ்தோத்திரம். என் போக்கிலும் வரத்திலும் நாள்தோறும் என்னை ஆசீர்வதித்தீர், உம்முடைய உதவிக்காகவும் பெலனுக்காகவும் நான் எப்பொழுதும் உம்மை சார்ந்து இருக்கிறேன். அடியேனுடைய வாழ்க்கையில் நீர் நடப்பித்த எல்லா நற்காரியங்களுக்காகவும் உமக்கு நன்றி சொல்லி துதிக்கிறேன் . இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் , ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து