இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் பாவத்தில் கவனக்குறைவாக இருக்கிறோம் என்பது கிருபை என்று பொருள்படாது. நம்முடைய வாழ்க்கையை கிறிஸ்துவின் மகிமைக்கு ஒப்புக்கொடுக்கும்பொழுது பாவத்திற்கு மரிக்கிறோம். நாம் பாவம் அல்லது பாவத்தின் வல்லமை நம்மை மேற்கொள்ள எப்பொழுதும் விரும்புகிறதில்லை. எங்கள் பாவத்தை மூடும்படியாய் இயேசு கொடுத்த கோரமான மரணத்தின் விலையை அலட்சியமாய் நாம் என்னக்கூடாது. அப்போஸ்தலனாகிய பவுல் கூறும்பொழுது அதிக உறுதியுள்ள வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார் (கூடாதே ! என்பது ஒரு எளிமையான மொழிபெயர்ப்பு : " தேவனோடு தடை !""நினைக்க இயலாத !""அருவருக்கத்தக்க !" போன்ற சொற்கள் மிகவும் பொருத்தமாயிருக்கும் ). கிருபையினால் இரட்சிக்கப்பட்டவர்கள், பரிசுத்தக் கட்டளையை மீறுவதை விட பாவம் அதிகமென்று உணருகிறோம். இயேசுவின் தியாகத்தைக்காட்டிலும் நாம் நம்முடைய பாவத்தை தேர்ந்தெடுக்கும்பொழுது , பாவமானது இயேசு நம் மீது வைத்ததான அன்பைக்காட்டிலும் லேசாக எண்ணங்கொள்ள செய்கிறது. பிதாவாகிய தேவன் நம்மை தம்முடைய குடும்பத்தில் இணைக்க கொடுத்ததான பெரிய விலையை பாவமானது எதிர்க்கிறது. அவர் நம் மீது கொண்டதான அன்பைத் தெரிந்துக் கொள்வதைக் காட்டிலும் பாவத்தை தெரிந்துகொள்ளும்பொழுது, பிதாவின் இருதயம் நொறுக்குகிறது . தேவனை தவிர்த்து பாவத்தை தேர்ந்தெடுப்பது நம்முடைய சுயவிருப்பமாயிருக்கிறது, அப்படி தெரிந்துகொள்வதின் மூலம் அந்த பாதை நம்மை அழிவின் பாதைக்கு கொண்டுச் செல்கிறது.

என்னுடைய ஜெபம்

பிதாவே, ஆண்டவராகிய இயேசுவின் சிலுவையில் மரணத்திலுண்டான இரட்சிப்பின் மூலமாய் நீர் கொடுத்த ஒப்பில்லாத அளவற்ற கிருபைக்காக உமக்கு நன்றி. என் பாவங்களை வெறுக்கத்தக்க இருதயத்தை தாரும். பரிசுத்தத்தின் மேல் பிரியமாயிருக்கவும் இன்னுமாய் பரிசுத்தத்திற்கான விலையை உணர்ந்து பாராட்டும் ஞானத்தைத் தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து