இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அறிவுக்கெட்டாத அந்த அன்பு . அதை விளக்குவது மிகவும் கடினம், ஆனால் பல ஆண்டுகளாக உங்கள் மனைவியையோ அல்லது கணவரையோ நீங்கள் நேசித்து, அவர்/ அவள் உங்களின் சரீரத்தில் உள்ள அவயங்களை போல நெருக்கமாக இருக்கும்போது, ​அதின் அர்த்தம் என்ன என்பதை நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.நீங்கள் ஒரு பிள்ளையை நேசிக்கிறீர்கள், நீங்கள் நினைத்து பார்க்காததை மற்றொரு மனிதருக்குச் செய்வதை , அந்த பிள்ளைக்கும் செய்ய முடியும் , ​​​​ இப்பொழுது இந்த வாக்கியத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் தேவனுக்கு முன்பாக நின்று, அவருடைய அனைத்து பெரும் செல்வங்களுக்கும் முழு புத்திரசுவீகாரத்தையும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முழு உடன்சகோதரனுமாய் ஏற்றுக்கொண்டு, நீங்கள் பரிசுத்தராகவும், கோபக்கினையில்லாமல், குற்றமற்றவராகவும் காணப்படுகிறீர்கள் என்பதை அறிந்தால், இந்த வசனத்தின் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறீர்கள்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள மற்றும் ஆராய்ந்து அறிய முடியாத தேவனே , வார்த்தைகளையும் அறிவையும் விட மேலான அன்பை என் ஆத்துமாவில் அறிய எனக்கு உதவுங்கள், இதினால் நான் உம்மைப் போலவே இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன் , ஆனால் நான் விசுவாசத்தின் மூலமாய் உம்மை அறிவது போலவே அனுபவத்திலும் உம்மை அறிந்துக்கொள்ள உதவியருளும் . இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து