இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் அவருடைய ஆசீர்வாதங்களை தேடவேண்டுமென்று விரும்புகிறார். அவர் நம்முடைய வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்பினதால் அல்ல, அவர் நம்மை ஆசீர்வதிக்கவும், நம் வாழ்க்கையில் வருகிறதான எல்லா நன்மைகளும் அவரிடத்திலிருந்து வருகிறது என்று நாம் அறிந்து கொள்ளவும் விரும்புகிறார் . ஆகவே நாம் அவருடைய பிரசன்னத்தையையும் , கிருபையையும், ஆசீர்வாதத்தையையும் தேடுவோமாக .

என்னுடைய ஜெபம்

பிரியமான தகப்பனே, எனக்கு உம்முடைய ஆசீர்வாதமும், வழிகாட்டுதலும் தேவை. தயவுகூர்ந்து என் இருதயத்துக்கு பாரமாய் இருக்கிறதான பல விஷயங்களில் என்னை ஆசீர்வதித்தருளும்.... (உங்களுடைய இருதத்தில் உள்ள காரியங்களை தேவனிடத்தில் பகிர்ந்துகொளுங்கள்) மேலும் அன்புள்ள தகப்பனே பின்வரும் விஷயங்களில் எனக்கு உம்முடைய ஞானத்தை தாரும் . கடைசியாக,அன்புள்ள பிதாவே தயவுகூர்ந்து என் வாழ்க்கையில் நீர் என்னோடுகூட இருக்கிறீர் என்பதை இந்த வாரத்தில் தெரியப்படுத்தும். என் மீது நீர் கொண்டிருக்கிற அன்பை எப்பொழுதும் நான் சந்தேகம் கொண்டதில்லை. ஆனாலும் அடியேன் முன் இப்பொழுது இருக்கிறதான சவால்களை எதிர்கொள்ள நீர் என் அருகில் இருக்கிறீர் என்பதை உறுதிசெய்யவும் விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து