இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உலகம் இரட்சகரை விரும்புகிறது ஆனால் ஆண்டவரை அல்ல. புதிய ஏற்பாடு தெளிவாக உள்ளது, கர்த்தரையன்றி , ஒரு இரட்சகர் இரட்சகரும் அல்ல, நண்பரும் அல்ல. பழைய ஏற்பாடு நமக்கு எதையாவது காட்டியிருந்தால், தேவனின் சட்டங்கள் அவருடைய சுய விருப்பதிற்காக அல்ல, ஆனால் அவருடைய சொந்த ஜனங்களை பாதுகாப்பதற்காக கொடுக்கப்பட்டது . இந்த வாரம் இயேசுவை ஆண்டவர் என்று அழைப்பது மட்டுமல்லாமல், அவர் நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிறார், அவருடைய நல்ல ஆவி நம்மில் நற்காரியங்களை உருவாக்குகின்றது என்பதைக் காண்பிக்கும் வகையில் ஜீவிப்போம் .

என்னுடைய ஜெபம்

மிகவும் பரிசுத்தமுள்ள ஆண்டவரே, தயவுசெய்து என் வாழ்க்கையையும் என் விருப்பத்தையும் நீர் கட்டுப்படுத்திக் கொண்டு, நான் வார்த்தையினால் மாத்திரமல்ல , சிந்தனையிலும், கிரியையிலும் அடியேன் முற்றிலுமாய் உம்முடையவனாக இருக்ககும்படி உதவியருளும் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து