இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவானவர் பாவத்திற்கு மரித்தது போல, நாம் ஞானஸ்நானம் பெற்றபோது நம்முடைய விசுவாசத்தின் மூலமாய் பாவத்திற்கு மரித்தோம். நேற்றைக்கான நம் வசனத்தில் பவுல் இவ்வாறு கூறுகிறார் : அவர் {இயேசு} மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். நம் ஞானஸ்நானத்தின் மூலமாய் பாவத்தை தள்ளி வைப்பது என்பது பாவத்தை முற்றிலுமாய் நம்மிடமிருந்து விலக்கி வைக்கப் போவதில்லை. நாம் ஒவ்வொரு புதிய நாளும் இயேசுவின் உயிர்த்தெழுந்த புதிய வாழ்க்கையை பற்றிக்கொள்ள வேண்டும். தேவனின் உற்சாகமான சித்தத்திற்கு நம் இருதயங்களைத் திறந்து கொண்டு, பரலோகத்தின் தேவனுக்காக வாழ்வதில் உறுதியோடு ஒவ்வொரு நாளையும் நாம் தொடங்க வேண்டும். முற்காலத்தில் மரித்து , அடக்கம்பண்ணப்பட்ட கடந்த கால காரியங்களிலிருந்து இருந்து விலகி இருப்போம். இயேசுவின் மீதும், நமக்காக அவர் வைத்திருக்கும் எதிர்காலத்தின் மேல் கவனம் செலுத்தி, தேவனுக்காக உண்மையும் உத்தமுமாய் வாழ்வோம்.

என்னுடைய ஜெபம்

நேற்றும் இன்றும் என்றும் மாறாத பரலோகத்தின் அன்பான பிதாவே , எனது கடந்தகால பாவ வாழ்க்கை கடந்த காலத்தில் புதைக்கப்பட்டு இறந்ததாக இருக்க விரும்புகிறேன். உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஓர் துடிப்பான வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ள எனக்கு அதிகாரம் தாரும் .உம் சித்தத்திற்கு வாழ என்னை ஒப்புக்கொடுக்கும் போது உம் பிரசன்னத்தை எப்பொழுதும் எனக்கு தயவாய் தாரும்.இயேசுவின் நாமத்தினாலே , நான் இதைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து