இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் பாவத்தை குறித்து எவ்வளவு கவனமாக இருக்கிறோம்? தேவன் அதை எவ்வளவு தீவிரமாகக் கருதுகிறார் என்பதை பரிசுத்த வேதாகமம் நமக்கு நினைப்பூட்டுகிறது. பாவத்தின் வல்லமையானது, நம்மை விசுவாசத்திலிருந்து வழுவச்செய்து , சிக்கவைத்து, இழுத்து, தேவனிடம் நம் இருதயத்தை கடினப்படுத்துகிறது, இறுதியில் அதன் வல்லமை நம்மை மூழ்கடித்துவிடும் (எபிரெயர் 2:1, 3:12-14, 6:1-8) , 10:23-29). ஊக்கம் - குறிப்பாக உற்சாகப்படுத்துதல் , ஆறுதல் மற்றும் சரிசெய்தல் என்ற முழு பரிசுத்த வேதாகமத்தில் உள்ள அர்த்தங்களில் - நாம் ஒருவருக்கொருவர் கொண்டு வரக்கூடிய பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்றாகும். நாடோறும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தும் அன்பான கிறிஸ்தவ நண்பர்கள் பாவத்தின் தாக்கத்தையும் அதினால் உண்டாகும் அழிவுகரமான முடிவையும் தவிர்க்க அல்லது மேற்கொள்ள முடியும்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , பாவத்தின் வல்லமை ஏமாற்றக்கூடியது மற்றும் கவர்ச்சியானது என்பதை நான் அறிவேன். இன்று என்னுடைய ஊக்கம் தேவைப்படுபவர்களைப் சந்திக்க எனக்கு உதவுங்கள், அதனால் நாம் ஒருவரையொருவர் பாவத்தின் கவர்ச்சியான வஞ்சனையிலிருந்து தப்பிக்க உதவ முடியும். சாத்தானின் எல்லா சோதனைகளையும் தாங்கிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து