இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே ! எவ்வளவு மேன்மையான வாக்கியம். கிறிஸ்துவுக்குள்ளாய் நாம் யாராயிருக்கிறோம் : முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம். வியாகுலமோ ,எதிராளியோ , துன்பமோ, மரணமோ இவைகளில் எதுவும் இயேசு கிறிஸ்துவை விட்டு நம்மை பிரிக்கமாட்டாது. ஒருமுறை நம் வாழ்க்கை கிறிஸ்து இயேசுவோடு ஒப்புரவாகும்போது நம்முடைய எதிர்காலம் அவரோடே கூட இணைக்கப்பட்டிருக்கிறது. (கொலோசெயர் 3: 1- 4 ).

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, உமக்கு எப்படி நன்றி சொல்வதென்று அறியேன். நான் இயேசுவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கைக்காகவும் , உம்முடைய கிருபைக்காகவும் , என்னில் வாழும் ஆவியானவருக்காகவும் , பரலோகத்தின் வாக்குதத்தத்திற்காகவும், உம் அன்பினாலே என்னை மீட்டெடுத்து மறுபடியும் ஜெநிப்பித்ததற்காகவும் உமக்கு நன்றி. அடியேன் எதிர்க்கொள்ளும் எந்த காரியங்களிலும் நீர் என்னோடு கூட இருக்கிறீர், நான் தனியே விடப்படுவதில்லை என்று உத்திரவாதம் தந்து இருக்கிறீர் அதற்காகவும் உமக்கு நன்றி. அன்புள்ள கர்த்தாவே, எல்லாவற்றிக்கும் மேலாய் இவ்வுலகத்தின் யாதொரு வல்லமையுள்ள காரியமும் இயேசு கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னைப் பிரிக்கமாட்டாது என்று நிச்சயித்திருக்கிறேன். உம்மோடு நித்திய காலமாக வாழும்படியான வாழ்க்கையை எதிர்நோக்குகிறேன். இயேசுவின் நாமத்தில் உமக்கு நன்றி. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து