இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வேறுப்பட்ட முடிவுகளை நான் எடுக்க விரும்பினாலும் , என் சொந்த முடிவுகளுக்கு நான் மாத்திரமே பொறுப்பேற்கிறேன். நான் அவர் மீது நம்பிக்கைக் கொண்டு தேவனுடைய சித்தத்திற்கு எனது வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து வாழ அனுமதித்ததற்காக உண்மையிலே உமக்கு நன்றி.தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பதையும்,செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்(பிலிப்பியர் 2:13) சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதுஎன்று அறிந்திருக்கிறோம் (ரோமர் 8:28). எனது அனைத்து திட்டங்களும் அவருடைய சித்தத்திற்கு உட்பட்டவை என்று முழுமனதாக ஒப்புக்கொண்டு, எனது இலக்கும், வெற்றியும் அவருடைய கரங்களிலிருக்கிறது என்று மேன்மை பாராட்டுகிறேன். அடியேனுக்கு முன்பாக இருக்கிறதான அனைத்து காரியங்களையும் தொகுத்து ஒரே வார்த்தையில் மகிழ்ச்சியாக அறிவிப்பது என்னவென்றால் : "கர்த்தருக்கு சித்தமானால் !".

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே, என்னுடைய வாழ்க்கையும், எதிர்காலமும் உம்முடைய கரங்களில் இருப்பதற்காக நன்றி. அநேக நேரங்களில் உம்மை முழுமனதாக சாராமல் என் பெலத்தை மாத்திரமே நம்பி வகுத்ததான திட்டங்களுக்காக அடியேனை மன்னித்தருளும் . என்னுடைய ஆணவத்தினாலே மதியற்று எடுத்ததினால் உண்டான தோல்வியின் திட்டங்களிருந்தும் குழப்பத்திலிருந்தும் என்னை மீட்டமைக்காக உமக்கு நன்றி. அன்புள்ள பிதாவே, என்னுடைய திட்டங்களையும், வாழ்க்கையையும், எதிர்காலத்தையையும் உம்முடைய தயவுள்ள சித்தத்திற்கு மகிழ்ச்சியாக ஒப்புவிக்கிறேன். இயேசுவின் பரிசுத்த நாமம் மற்றும் அவருடைய வல்லமையின் மூலம் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து