இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சோதனையானது பழைய பாதைக்கும் (தேவனுடைய நமக்கான சித்தம் ), சாத்தானால் கொடுக்கப்பட்ட புதிய பாதைக்கும் இடையேயான விருப்பத் தேர்வாகும். அநேகவேளைகளில் சாத்தானின் பாதை சந்தோஷம்,செழிப்பு மற்றும் சாதனைக்கான குறுக்குவழியாக நமக்கு முன்வைக்கப்படுகிறது. எனினும், இந்தப் பாதை தேவனிடமிருந்தும், அவர் கொடுக்க விருப்பமுள்ள ஆசீர்வாதங்களிருந்தும் நம்மை வழி விலகச்செய்கிறது .எரேமியாவின் நாட்களில் வாழ்ந்ததான தேவ மக்கள் தேவனுடைய பாதையைத் தள்ளி "இவைகளில் நடக்க மாட்டோம் "என்று சொன்னதைப் போல நாமும் சொல்லாது இருப்போமாக . அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையின் பலன் சொந்த அழிவு.

என்னுடைய ஜெபம்

அன்புநிறைந்தப் பிதாவே, சர்வவல்லமையுள்ள தேவனே, உம்முடைய பாதையை விட்டு விலகி, விரைவாய் சந்தோஷம் தரக்கூடிய மற்றும் எளிதாய் தோன்றக்கூடிய பாதையிலே சென்றதற்காக என்னை மன்னியும். பரிசுத்தாவியானவரைக் கொண்டு சாத்தான் என் முன் வைக்கிறதான சோதனைகளையும் அதின் கசப்பான முடிவுகளையும் அறியும்படி எனக்கு உதவியருளும். உம்முடைய வழிகள் சந்தோஷம்,சமாதானம், இளைப்பாறுதலுக்கான வழியாகும் என்று அறிந்திருக்கிறேன். நம்பிக்கையுடன் நடக்கும்படி அடியேனுக்கு தைரியத்தைத் தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து