இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு மிகச் சிறந்த காரியம் என்னவென்றால் நாம் ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பதும், நமக்காக ஜெபிப்பதுமாம் , இப்படிச்செய்வது நாம் இன்னும் தேவனை தெளிவாய் அறிந்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் . பரிசுத்தாவியானவர், நாம் தேவனை தெளிவாய் அறிந்துக் கொள்ளவும் (1 கொரிந்தியர் 2), அவரைத் தொழுதுக் கொள்ளவும் ( யோவான் 4), அவரோடுகூட சம்பாஷிக்கவும் (ரோமர் 8), உதவிச்செய்கிறவராயிருக்கிறார் . நாம் தேவனை மேலோட்டமாய் அறிந்துக்கொள்ளாமல், அவரை தெளிவாய் அறிந்துக்கொள்ளும்படி அவருடைய ஆவியை பிரயோகித்து நமக்கு உதவிச்செய்யும்படி தேவனை நோக்கி கேட்போமாக . தேவனானவர் சர்வசிருஷ்டிக்கும் எஜமானர் மாத்திரமல்ல; அவர் நம்முடைய தகப்பனும் நம்மீது ஆழமான அக்கறை கொண்டுள்ளவருமாய் இருக்கிறார் .

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே, எல்லா மகிமைக்கும், மறைப்பொருள்களுக்கும் தேவனே, பரிசுத்தாவியின் ஒத்தாசையோடு என்னுடைய மனக்கண்களையும், இருதயத்தையும் திறந்து உம்மை தெளிவாய் புரிந்துக் கொள்ளும்படி உதவியருளும். அடியேனுடைய சரீரப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய குடும்பத்திற்கு புத்தியையும், தெளிவான மனக்கண்களையும் தந்து உம்மையும், உம் அன்பையும், உமது மகிமையையும் அறிந்துக் கொள்ளும்படி ஆசீர்வதியும். நாங்கள் உம்மை பூரணமாய் அறிந்துகொண்டு உம்முடைய குணாதிசயங்களையும், கிருபையையும் முழுமையாக பிரதிபலிக்க விரும்புகிறோம். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து