இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பேசுவது மிக எளிதானது, "வார்த்தைகளை விட கிரியைகளே வேகமாகச் சென்றடையும் ". நாம் வாழ்கிற முறையின் மூலமாயும் , நாம் ஒருவருக்காக ஒருவர் என்னச் செய்கிறோம் என்பதின் மூலமாயும் கிறிஸ்துவுக்குள்ளான நமது குடும்பத்தினர் , நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகளின் மீதான நம்முடைய அன்பைக் காண்பிப்போம்.

என்னுடைய ஜெபம்

அன்பும், உதாரத்துவமும் நிறைந்த தேவனே, என் அப்பா பிதாவே, உம்முடைய பிள்ளைகளுக்கு எனது அன்பு வெறும் வார்த்தையாய் மாத்திரம் இருந்தமைக்காக என்னை மன்னித்தருளும். கிறிஸ்துவுக்குள்ளான ஒரு சகோதரனையாவது, ஒரு சகோதரியையாவது அன்பான செயலினாலும் , கனிவான கிரியையினாலும் அல்லது முறையாய் ஊழியஞ்செய்வதினாலும் அவர்களை ஆசீர்வதிக்க தயவுகூர்ந்து இன்றே எனக்கு வாய்ப்பைத்தாரும். என்னுடைய இரட்சகர் எப்படி தன்னுடைய அன்பை விளங்கச்செய்தாரோ அவ்வண்ணமே நானும் செய்ய விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து