இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஜலம் மற்றும் ஆவி - இவ்விரண்டு காரியங்களும் புதிய ஏற்பாட்டில் முழுவதும் மாற்றம் மற்றும் மறுபிறப்பு ஆகிய காரியங்களில் இணைந்து முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது (அப்போஸ்தலர் 2:38-41; 1 கொரிந்தியர் 6:9-11; டைட்டஸ் 3:3-7). ஒன்று சமர்ப்பணம் மற்றும் முற்றிலுமாய் ஒப்புக்கொடுப்பது . மற்றொன்று, பரிசுத்த ஆவியின் மூலம் நம் வாழ்வில் ஊற்றப்பட்ட அவருடைய வல்லமையால் தேவன் மட்டுமே நம்மைப் புதியவர்களாக மாற்ற முடியும் என்பதை நினைவூட்டுவதாகும். நம்மால் சாதிக்கக்கூடிய ஒன்றும் இல்லை. எனவே, இயேசுவும், யோவானும் கிருபையினால் இந்த இரண்டு காரியங்களை ஒரு மறுபிறப்பின் நிகழ்வாக இலக்கண ரீதியாக இணைத்தனர் - "ஜலம் மற்றும் ஆவியினால் பிறப்பது ." இயேசு தம்முடைய ராஜ்ய வாழ்வில் பிரவேசிப்பதற்கு அவைகளை முக்கியமானதாக ஆக்கியதில் ஆச்சரியமில்லை: நாம் அவருக்கு விசுவாசமாக இருக்கிறோம், மேலும் ஆவியானவர் தேவனுடைய சபையாகிய குடும்பத்தில் நமக்குப் புதிய பிறப்பைத் தருகிறார்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த மற்றும் நீதியுள்ள பிதாவே . எனது சிறந்த முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைகின்றன என்பதையும், எனது நிலைத்தன்மை எப்போதும் சீராக இருப்பதில்லை என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். நீர் இயேசுவின் மூலமாய் உமது கிருபையை எனக்கு அளித்ததற்காகவும் , உம்முடைய குடும்பத்தில் என்னுடைய ஆவிக்குரிய பிறப்பின் மூலம் என்னைப் புதுப்பித்ததற்காகவும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே , நான் உமக்கு நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து