இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறது ? மெய்யான , அழிந்துபோகாத , நீண்ட கால பாதுகாப்பான காரியத்தில் முதலீடு செய்ய நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களின் மிக முக்கியமான முதலீடுகள் சிறந்த மற்றும் உத்தரவாதமான பலனை கொடுப்பதை ஏன் நீங்கள் உறுதி செய்யக்கூடாது! உங்கள் பொக்கிஷத்தை பரலோகத்தின் தேவனிடம் சேர்த்து வையுங்கள்!

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , நான் எப்போதும் வைத்திருக்கக்கூடிய ஒரே நம்பகமான பாதுகாப்பு உம்மிடமே உள்ளது என்பதை நான் அறிவேன். என் நேரத்தையும், தாலந்தையும், பொக்கிஷத்தையும் உம்மை கனப்படுத்தவும் , மற்றவர்களை உம்மிடம் கொண்டு வரவும், என் பொக்கிஷங்களை உம்மிடம் முதலீடு செய்யவும் நான் முயலும்போது, ​​தயவுசெய்து எனக்கு ஞானத்தைத் தாரும் . இயேசுவின் நாமத்தினாலே , நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து