இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பாவத்தின் சம்பளம் மரணத்தை வருவிக்கும் ஆனால் தேவனுடைய கிருபைவரமோ நமக்கு ஜீவனைக்கொடுக்கும். இந்த இரண்டு காரியங்களுக்கும் இடையே உள்ளதான உச்சத்தின் வேறுபாடு ? கிறிஸ்துவின் சிலுவையானது நம்மை பாவத்தை விட்டு விலக்கி இரக்கம், மன்னிப்பு மற்றும் தேவனுடைய மீட்பிற்கு கொண்டுச்செல்கிறது.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே, இயேசுவின் மூலமாய் என்னை மீட்டமைக்காக உமக்கு நன்றி. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, என்னுடைய பாவத்திற்கு நீர் செலுத்தின விலைக்காக உமக்கு நன்றி. ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரே, அடியேனை சுத்திகரித்து தேவனானவர் என்னிலே வாசம்செய்யும் பரிசுத்தஸ்தலமாய் மாற்றினமைக்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து