இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உணவும் , உடையும் மனிதனுக்கு மிகப் பெரிய கவலைகளில் ஒன்றாய் இருக்கிறது. இதுபல நூற்றாண்டுகளாகவே இருந்துக் கொண்டிருக்கிறது . இவைகள் நம் உலகத்திலே எவ்வளவு முக்கியமானதாய் தோன்றினாலும் உண்மையில் நம்முடைய வாழ்க்கையானது இவைகளை விட மிகப் பெரியது என்று நினைபூட்டுகிறார். மேலும், நாம் தேவன்மீது நம்பிக்கையோடு இருக்கும்போது அவர் நம்முடைய தேவைகளை சந்திப்பார் என்கிற நம்பிக்கையோடும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார் .

என்னுடைய ஜெபம்

பிதாவே, என் பொறாமை மற்றும் பேராசையான இருதயத்தை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க தயவாய் எனக்கு உதவியருளும். அடியேனுக்கு உலக காரியங்களின் மேல் உள்ள ஆசையானது கவலையுற்று, விசுவாசத்தைக் குன்றிப்போகச் செய்கிறது. உம்முடைய இராஜ்ஜியத்தை பற்றிய இன்னும் விசாலமான பார்வையை எனக்குத் தந்தருளும்,அதன்முலம் நான் உம்முடைய ஆசீர்வாதங்களை உபயோகித்து மற்றவர்களுக்கு உதவிச் செய்ய முடியும். ஆண்டவராகிய இயேசுவின் நாமத்திலே. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து