இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கசப்புடனும் , மனதிலே பொறாமையுடனும் ஜீவிப்பது காலத்தையும், பெலனையும் வீணடிப்பதாகும் . மற்றவர்களை ஆசீர்வதிக்கவும் , தேவனை போற்றவும் அல்லது வாழ்க்கையை சந்தோஷமாய் தேவனுக்குள் அனுபவிக்கவும் கொஞ்சம் பெலன் மாத்திரமே போதுமானது . மற்றவர்கள் மேல் உள்ள கசப்பான இருதயத்தை தவிர்ப்பதற்கான ஒரே வழி, அவர்களுடைய வாழ்க்கையை ஆசீர்வதிக்கும் வழிகளில் எப்பொழுதும் அவர்கள் மீது அன்புகூர்ந்து , அவர்களுடைய தேவைகளை அறிந்து அவர்களுக்கு ஊழியம் செய்வதும்தான். இதைச் செய்வது சரியானது என்று நினைப்பது கடினமாக இருந்தாலும், இதைச் செய்ய முடியாவிட்டாலுங் கூட , நாம் தேவனை அறிந்திருப்பதாலும் , அவரைப் பிரியப்படுத்த விரும்புவதாலும் இதைச் செய்ய வேண்டும் !

என்னுடைய ஜெபம்

வெளிச்சம் , அன்பு மற்றும் இரக்கத்தின் பிதாவே , என்னைச் சுற்றியிருக்கும் பிறர் வீழ்ச்சியடைவதைப் பார்ப்பதில் உள்ள மலிவான தன்மையை அல்லது சந்தோஷத்தை என் இருதயத்திலிருந்து அகற்றியருளும் . மாறாக, புறக்கணிப்பவனாக இருப்பதை விட காப்பாற்றுபவனாக இருக்க எனக்கு உதவியருளும். உமது கிருபை என் நட்பில் வெளிப்பட வேண்டுகிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து