இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தங்களுக்கு தாங்களே உதவிச் செய்துக் கொள்ள இயலாதவர்களுக்கும் , தாங்களாகவே பிரச்னையில் சிக்கிக்கொண்டவர்களுக்கும் , தவறாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் , மரணத்திற்கென்று நியமிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கும் நாம் உதவுவது இயேசுவுக்கு செய்கிறதாய் இருக்கிறது. இயேசுவானவர் என்ன செய்யக்கூடும் ? நம்பிக்கையற்று, விரக்தியின் சூழலிலிருந்து தேவனை கண்டுபிடிக்கும்படியாய் யாரோ ஒருவருக்கு அவர் உதவிச் செய்கிறவராய் இருக்கிறார்.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே, உங்கள் வியக்கத்தக்க கிருபையை, உமது ஜனங்கள் உணர்ந்து கொள்ளும்படி நான் முயற்சித்து உதவும் எனது ஊழியத்திலே எனக்கான வாய்ப்புகளை அறிந்துகொள்ளும்படியான ஞானத்தை தயவாய்த் தாரும். எனது மீட்பர், இரட்சகர் மற்றும் நண்பராகிய,இயேசுவின் நாமத்தில். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து