இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் தமது மக்களுக்கு உறுதியுள்ளவராய் இருக்கிறார். அவர் நீதியையும், அதை பின்பற்றுகிறவர்களையும் நேசிக்கிறார். அவரது குணாதிசயங்களை தங்களுடைய வாழ்க்கையில் காண்பிப்பதன் மூலம் அவரை கணப்படுத்த தேடுபவர்களை, அவர் மறப்பதில்லை. தம்முடைய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மதித்து, தம்முடைய காக்கும் வல்லமையால் அவர்களை என்றென்றும் பாதுகாப்பேன் என்று தேவன் வாக்களித்துள்ளார்.தேவன் வேறோரிடத்தில் வாக்களித்தது என்னவென்றால் "நான் உங்களை விட்டுவிலகுவதுமில்லை ", "நான் உங்களை கைவிடுவதுமில்லை ".

என்னுடைய ஜெபம்

நித்யானந்தமும் , உண்மையுமுள்ள பிதாவே, மகாப் பெரிதான உம்முடைய வாக்குத்தத்தங்களுக்காக உமக்கு நன்றி. அடியேனுடைய வாழ்க்கையிலே உம்முடைய உண்மையுள்ள சமூகம் இருக்கிறது என்பதை நினைப்பூட்டுவதற்காக மகிழ்ச்சியடைகிறேன். எனது எதிர்காலத்தை நான் உங்களிடம் ஒப்படைக்க முடியும் என்றும், வெற்றியுடனும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அடியேனை உம்முடைய சமூகத்தில் கொண்டு வருவீர்கள் என்றும் முழுமையாக நம்புகிறேன்.எனது உறுதியான மற்றும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து