இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"எல்லாம் உங்களுக்கு விருப்பமானபடி ", இதுவே நம் உலகத்திலே உயர் சாதனையாளர்களுக்கு நிலவும் மனநிலையாகும். ஆனால் அது தவறாகும். தேவன் அவர்களை ஆசீர்வதிக்கவில்லையெனில் , நாம் மிகவும் அற்புதமான காரியங்களை கட்டியெழுப்புகிறதான மற்றும் அதில் ஒரு பகுதியாக இருக்க செய்கிறதான முயற்சியானது இறுதியில் வீணாகும் . நமது கடுமையான முயற்சியால் சிறிது காலம் செழிப்பாய் இருக்கக்கூடும், ஆனால் அற்புதமான காரியங்களின் திட்டமும், நிர்மாணித்தலும் தேவனிடத்திலிருந்து வராவிட்டால், அவர்கள் காலத்தின் சோதனையில் நிலைநிற்க மாட்டார்கள்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே மற்றும் நித்ய பிதாவே, என் சொந்த முயற்சிகள் மற்றும் இடைவிடாத உழைப்பால் எல்லாவற்றையும் செய்ய முயற்சித்ததற்காக அடியேனை மன்னியும். எப்போதும் என்னுடைய எல்லா கவலையும் வெறுப்பும் செய்யமுடியாததைவிட உம்முடைய இராஜ்யத்திற்கான என் வேலையை முன்னேற்றுவதற்கு நீர் இன்னும் அதிகமாய் செய்ய முடியும். தயவுகூர்ந்து என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் முன்னிலை வகியும் ; உம்முடைய சித்தத்திற்கு இணக்கமாக இல்லாத பட்சத்தில் அடியேனுடைய முயற்சிகளைத் தோற்கடியும். உமக்கு மகிமைக் கொண்டுவருகிறதான மற்றும் உம்முடைய கிருபைக்கு நெருக்கமாக மற்றவர்களை கொண்டுவருகிறதான முயற்சிகளுக்கு தயவுகூர்ந்து அதிகாரம் அளியுங்கள் . இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து