இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நித்திய ஜீவன் இப்பொழுது தொடங்குகிறது! யோவான் எழுதின சுவிசேஷப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இயேசுவுடைய செய்திகளில் அதுவும் ஒன்றாகும். நாம் பிதாவின் வீட்டிற்குச் செல்லும்போது நமக்குக் காத்திருக்கும் எல்லா ஆசீர்வாதங்களையும் நம்மால் அனுபவிக்க முடியாது.ஆனால், இப்போதோ நம்முடைய வாழ்க்கையில் அவருடைய அன்பையும், பிதாவின் பிரசன்னத்தையும் நாம் அறிந்து கொள்ளவும், அனுபவிக்கவும் வேண்டும் என்று இயேசுவானவர் விரும்புகிறார், அவர் நமக்காக அதற்கு ஜெபித்துமிருக்கிறார் !எனவே பிதாவை தேடுவோமாக…அவரைப் பற்றி மேலோட்டமாக தெரிந்துக் கொள்வதல்ல, அவரை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் !அவர் நம்மிடம் கிட்டி வர ஏங்குகிறார், நாம் அவரிடம் நெருங்கி வருவதால் அவ்வாறு செய்வார்!அவர் நம்மில் கிரியைசெய்கிறார், எனவே உண்மையான விஷயம் அவர் நம் அருகில் இருப்பது மட்டுமல்ல, அவருடைய பிரசன்னம் மற்றும் கிரியை பற்றிய விழிப்புணர்வு நமக்கு வேண்டும் . பிதாவிடம் நம் கண்களையும் இருதயங்களையும் திறந்து, அவர் நம்மோடிருப்பதை நமக்கு வெளிப்படுத்தும்படி அவரிடம் கேட்டுக்கொள்வோம்!

என்னுடைய ஜெபம்

பரலோகத்திலிருக்கிற பிதாவே, சர்வவல்லமையும், பரிசுத்தமும் உள்ள தேவனே, உங்களை அணுக என்னை அனுமதித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என் வாழ்க்கையில் கிரியை செய்வேன் என்ற உம் வாக்குறுதியால் நான் தாழ்மையுடன் இருக்கிறேன்.உங்கள் பிரசன்னம் மற்றும் கிருபையை நான் ஒப்புக் கொள்ளாத அளவுக்கு நான் தான் என்ற எண்ணம் கொண்டிருந்த வேளைகளுக்காக என்னை மன்னியுங்கள். உங்களது ஆவிக்குரிய பராமரிப்பு மற்றும் ஆவியின் மூலம் என்னில் உம்முடைய பிரசன்னம் நாள்தோறும் என்னோடு இருப்பதை அறிந்துகொள்ளும்படி செய்யுங்கள் . அன்பின் பிதாவே, உம்மை முற்றிலுமாக புரிந்துகொள்ள அடியேனுடைய கண்களையும், இருதயத்தையும் திறந்தருளும்.இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து