இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்துவுக்குள் , நமக்கு பல சிலாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது - நியாயப்பிரமாணம் , பாவம், மரணம், நரகம், பயம் மற்றும் பலவற்றிலிருந்து விடுதலை உண்டாயிற்று . பிரபஞ்சத்தினை உண்டாக்கினவர் , ஒரே மெய்யான மற்றும் ஜீவிக்கும் தேவனாய் இருக்கிறார் - அவருக்கு முன்பாக வந்து, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் பரலோகத்திலுள்ள நம்முடைய பிதாவிடம் வெளிப்படையாகவும், நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் பேசுவதற்கான தேவனுடைய மகா பெரிதான அழைப்பே நம்முடைய மிகப்பெரிய சுதந்திரங்களில் ஒன்றாகும். நம்பமுடியாத அளவிற்கு, மனிதர்களாகிய நாம் நமது நித்திய தேவனின் பிரசன்னத்திற்குள் நுழைந்து, நம்முடைய பிரச்சனைகள், துதிகள் மற்றும் விண்ணப்பங்களை அவருக்கு முன்பாக வைக்க முடியும், அவர் நம்முடைய கவலைகளைக் கேட்டு அக்கறை காட்டுகிறார், மேலும் நமது துதிகளையும் நன்றிகளையும் கேட்டு நம்மை ஆசீர்வதிக்கிறார்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் மிகவும் பரிசுத்தமான தேவனே , எனது விண்ணப்பங்கள் உம்முடைய கிருபையும், இரக்கமும் இல்லையென்று சொன்னால் என் ஜெபங்கள் வீணாய் போகும் என்பதை நான் முழுநிச்சயமாய் அறிவேன். ஆயினும்கூட, நான் உம்முடைய அன்பான பிள்ளை என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆகையினால் எனது விண்ணப்பங்கள் உமக்கு மிகவும் முக்கியம் என்று எனக்குத் நன்றாய் தெரியும். எனது துதியும் ஸ்தோத்திரமும் நன்றிகளும் உமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்பதால் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் . ஒவ்வொரு நாளும் என் ஜெபங்களை கேட்டதற்காக உமக்கு கோடானு கோடி நன்றி. எனது கவலைகளை நீர் கருத்தாய் விசாரித்து கேட்டதற்காக உமக்கு நன்றி. எனது சிறுபிள்ளை தன்மையிலே பொறுமையாகவும், எனது ஏமாற்றங்களுடன் மென்மையாகவும் இருப்பதற்காக உமக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக, பிதாவே , எனக்கு பெலனோ, தகுதியோ இல்லாதபோதிலும் அவைகளை செய்வதற்கான சுதந்திரத்தை கொடுத்ததற்காக உமக்கு நன்றி - எனது கவலைகளுடன் உம்முடைய சமூகத்திலே நுழைவதற்கும், நான் இருக்கிற பிரகாரமாகவே என்னை ஏற்றுக்கொண்டதற்காகவும் உமக்கு நன்றி. எனக்காக பரிந்து பேசுகிறவரும், என் இரட்சகருமான இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து