இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இராஜ்யங்கள் மீதான தேவனுடைய அன்பு இயேசுவுடனும், பிரதான கட்டளையுடனும் மட்டுமே தொடங்கியது என்று நினைப்பது தவறு. இஸ்ரவேலின் பெரிய எதிரியான நினிவேயைக் இரட்சிக்க யோனா பிரசங்கம் செய்தது நினைவிருக்கிறதா? ரூத்தின் விலையேறப்பெற்ற வரலாறு நினைவிருக்கிறதா, அவள் புறஜாதியானவளாக இருந்தும் தாவீது ராஜாவின் வம்சத்தில் சேர்க்கப்பட்டாள். அந்த வம்சத்தில் கடைசியாக வந்தவர் மேசியாவாகிய இயேசு. தேவன் எல்லா மக்களையும் நேசிக்கிறார், மேலும் அவர்கள் அவருடைய கிருபையில் பங்குக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகிற்கு அவருடைய உப்பாகவும், வெளிச்சமாகவும் இருக்கிறோம். உலகில் உள்ள அனைத்து மக்களையும் நேசித்து , அவர்களை மெய்யாக அன்புக்கூறும் ஒரே பிதாவிடம் மறுபடியுமாய் திரும்பிவரும்படி அவர்களை அழைக்கிறோம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே , உமது அன்பை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதில் அதிக ஆர்வத்தை என் இருதயத்தில் தூண்டுங்கள். எனது வாழ்க்கை, எனது. செல்வம் மற்றும் எனது அக்கறை இவ்வுலகம் முழுவதும் உமது கிரியையை நடப்பிக்கும்படி பயன்படட்டும். தயவு செய்து இயேசுவின் நற்செய்தியை தங்களின் கலாச்சாரம் அல்லாத பிற கலாச்சாரத்தில் பகிர்ந்து கொள்ளும் அனைவரின் முயற்சிகளையும் ஆசீர்வதியும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து