இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அநேக இருதயமும், நம்பிக்கையும், வீடுகளும் பாவத்தால் உடைக்கப்படுகின்றன. இந்த உடைப்பு நம்முடைய பழக்கவழக்கத்தை பாதித்து நம் வாழ்க்கையை கைப்பற்றுகிறது. தேவன் பாவத்தைத் தடுப்பதற்கும் அதின் குற்றத்தை மன்னிப்பதற்கான வழிமுறையையும் வழங்கியுள்ளார்: நம்முடைய பாவத்தின் நேர்மையான மற்றும் உண்மையான அறிக்கையிடுதல். மனப்பூர்வமான அறிக்கையிடுதல் என்பது பாவம் தேவனின் பார்வையில் என்னவாக இருக்கிறது என்பதைக் ஆவலாய்க்காணவும், அதில் நாம் பங்கேற்பதற்காக வேதனைப்படவும் செய்கிறது . அறிக்கையிடுதல் பாவ காயங்களைக் ஆற்றுகிறது என்பதில் ஆச்சரியமில்லை ( 1 யோவான் 1: 5, 2: 2 ). நம்முடைய பாவத்தை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டப்பின் ஒவ்வொருவருடைய பாவத்திலிருந்து சொஸ்தமடையும்படிக்கும் , அதின் சேதத்திலிருந்து விடுபடுவதற்கும் அவரிடம் வர வேண்டும் என்று தேவன் விரும்புவதில் ஆச்சரியமில்லை. நீதிமானுடைய வேண்டுதல்களுக்கு தேவன் அத்தகைய பெலனை வழங்குவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. நம்முடைய பாவத்தை அறிக்கையிட்டு அவைகளை விட்டுவிடுவோம்.

என்னுடைய ஜெபம்

அன்பின் பிதாவே, பரிசுத்தமும், கிருபையும் நிறைந்த தேவனே, என்னுடைய பாவங்களுக்காக அடியேனை மன்னியும்.... (நீங்கள் தேவனுக்கு முன்பாக அறிக்கையிட விரும்பும் பாவங்களை பட்டியலிடுங்கள் ). அன்பான தகப்பனே, எவர்களால் என்னுடைய பாவ பாரத்தின் சுமையை அறிக்கையினால் வைக்கமுடியுமோ மற்றும் எவர்கள் என்னுடைய மன்னிப்புக்காக ஊக்கமாய் ஜெபிப்பார்களோ அப்படிப்பட்டதான நீதிமான்களிடமாய் என்னை வழி நடத்தும். இன்னுமாய் உமது கிருபையின் வல்லமையினால் அதிக நம்பிக்கையுள்ளவனாக இருக்கும்படி என்னை வழி நடத்திச் செல்லுங்கள். மேலும், ஆவியின் வலிமையைக் கொண்டு பாவத்தை மேற்கொள்ள என்னுடைய வாழ்க்கையிலே உதவியருளும். இயேசுவின் நாமத்திலே, ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து