இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், திருட்டு கும்பல்கள், தீவிரவாதங்கள் , ஊழல் நிறைந்த தலைவர்கள், ஆட்களை கடத்துபவர்கள் மற்றும் பாலியல் வேட்டையாடுபவர்கள் நிறைந்த உலகில், தேவனுடைய மக்களாகிய நாம் சமகால கலாச்சாரத்தின் வன்முறை பகுதியை அதன் வழிகளை மாற்றுவதற்கு நம்முடைய ஆளுமையை செலுத்தப் போகிறோம் என்றால், நமக்கு சில உண்மையான வேலைகள் உள்ளன. ஒருவேளை தொடங்குவதற்கான இடம் பிதாவுக்கு முன்பாக முழங்காலில் நின்று , வன்முறை நிறைந்த உலகில் மாற்றத்தை ஏற்படுத்த எங்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வோம் ! நாம் வாழ்கிற நாட்களில் ஊடகங்களில் வன்முறை வெடிப்பதைப் பார்க்கும்போது, 7 ஆம் ​​​​சங்கீதத்தில் தாவீது ஜெபித்த ஜெபத்தை முழங்காலில் நின்று ஜெபிப்போம்: துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.

என்னுடைய ஜெபம்

எல்லா மக்களின் அன்பான ஆண்டவரும் பிதாவுமாகிய எங்கள் தேவனே , இன்று நாங்கள் வாழ்கின்ற உலகின் பல பகுதிகளிலும் கலாச்சாரங்களிலும் வேரூன்றியிருக்கும் வன்முறையை நியாயப்படுத்த அல்லது ஏற்றுக்கொள்ள நாங்கள் செய்த யாவற்றிற்காகவும் எங்களை மன்னித்தருளும் . தயவு செய்து எங்கள் நாளில் உண்டாகும் தீய மற்றும் விரோதமான வன்முறை வெடிப்புகளை முடிவுக்குக் கொண்டு வாரும் . உம்முடைய பார்வையில் விலையேறப்பெற்ற மக்களை அச்சுறுத்தவும், அடிமைப்படுத்தவும், அழிக்கவும் வன்முறையைப் பயன்படுத்துபவர்களை விரக்தியடையச் செய்து தோற்கடிக்கவும் உம்மிடம் தயவாய் கேட்கிறோம் . உம்முடைய மக்கள் நீதியுள்ள , இரக்கமுள்ள மற்றும் வன்முறையற்ற வாழ்க்கைக்கு ஒரு மாதிரியாக இருக்கட்டும். தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் காரணமாக, வன்முறை மற்றும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் யாவருக்கும் வேண்டிய பெலனையும் பாதுகாப்பையும் தாரும் . எங்கள் உலகத்தின் மீட்பராகிய இயேசுவின் நாமத்தினாலே , மன்றாடுகிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து